பொதுவாகவே பழங்களும் காய்கறிகளும் உடல் நலனை காக்கும் இயற்கையின் பொக்கிஷங்கள் ஆகும். ஒருசிலர் நேரமின்மை காரணமாக இவற்றைத் தவிர்க்கும் நிலை ஏற்படலாம். உடலுக்கு ஆரேக்கியம் தரும் காய் கனிகளை அரைத்து சாறாகப் பருக, பல்வேறு பிரச்னைகளுக்கு அதுவே தீர்வாக அமைகிறது. அதுபோன்ற பத்துவித காய் கனி ரசங்களையும் அவற்றின் பலன்களையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. ஆப்பிள் ஜூஸ்: மலச்சிக்கல், ஜீரணக் கோளாறு, மெதுவாக செயல்படும் லிவர் இவற்றுக்கு சிறந்த மருந்தாக ஆப்பிள் ஜூஸ் பயன்படுகிறது.
2. பீட்ரூட் ஜூஸ்: அனீமியா எனும் இரத்த சோகையைப் போக்க உதவி சீரான இரத்த ஓட்டத்திற்கு இந்த சாறு பயன்படுகிறது.
3. கேரட் ஜூஸ்: இரத்த சுத்திக்கு உதவுகிறது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணிகளுக்கு சத்து தரும் மிகச்சிறந்த உணவாகிறது.
4. வெள்ளரிக்காய் ஜூஸ்: அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை பருகுவது மிகவும் நல்லது. இதனால் உடல் நிறம் மற்றும் தலைமுடி சிறப்பாக இருக்க உதவுகிறது. பசி இல்லாதவர்களுக்கு பசி எடுக்க வைக்கிறது.
5. தேங்காய் பால்: சிறு குழந்தைகளுக்கும் உடல் வளர்ச்சி இல்லாதவர்களுக்கும் வளர்ச்சி பெற உதவுகிறது. வயிறு, தொண்டை புண்ணுக்கு மிகவும் நல்லது.
6. திராட்சை ஜூஸ்: அனீமியா, மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.
7. பப்பாளி ஜூஸ்: நோய்களை வர விடாமல் காக்கும் நோய் எதிப்பு சக்தியைத் தருகிறது. மேலும், முறையான ஜீரணத்திற்கு உதவுகிறது.
8. அன்னாசி பழ ஜூஸ்: உடல் பருமனைக் குறைத்து எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பற்களும் ஈறுகளும் வலுப்பெறவும் நரம்புகளுக்கு வலிமையையும் தருகிறது. ஜீரண சக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.
9. மாதுளம் பழ ஜூஸ்: முகப் பொலிவு கிடைக்கும். நரம்புகள் வலுவாகி ஜீரண சக்தியும் பசித்தன்மையும் அதிகரிக்கும்.
10. தக்காளி ஜூஸ்: வலுவான ஈறுகள், எலும்பு, நரம்பு இவற்றுக்கு உதவுகிறது . பொதுவாக தேக ஆரோக்கியம் அதிகரிக்கும்.
இனி, தினம் ஒரு காய் கனி சாறு அருந்தி உடல் நலம் காப்போம்.