Nutritious protein-rich foods
Nutritious protein-rich foodshttps://tamil.indianexpress.com

போஷாக்கு தரும் புரோட்டீன் நிறைந்த உணவு வகைகள்!

Published on

ம் உடலில் உள்ள உயிரணுக்களின் வளர்ச்சி, பராமரிப்பு, தேய்மானம் அடைந்த பாகங்களைப் புதுப்பித்தல், வேலை செய்வதற்குத் தேவையான வலிமை தர, குழந்தைகளின் வளர்ச்சி போன்ற பலவிதமான செயல்பாடுகளுக்கும் புரதம் அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. அவ்வாறான புரதச்சத்து எந்தெந்த உணவுகளில் அதிகமுள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

க்ளூட்டன் ஃபிரியான குயினோவாவில் மற்ற தானியங்களில் உள்ளதை விட அதிகளவு புரோட்டீன் உள்ளது. மேலும், இதில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்சிடன்ட்களும் அதிகமுள்ளன. எடை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்கவும் குயினோவா உதவும். நூறு கிராம் குயினோவாவில் 16.5 கிராம் புரோட்டீன் உள்ளது.

பசலைக் கீரையில் அதிகளவு புரோட்டீன் இருப்பதுடன், வைட்டமின் A, C, K ஆகியவையும் நிறைந்துள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க, பார்வைத் திறனைப் பாதுகாக்க, ஆரோக்கியமான இரத்த ஓட்டம் பெற என பலவிதமான செயல்பாடுகளுக்கும் உதவி புரிகிறது.

அவகோடா மற்றொரு புரதம் நிறைந்த உணவு ஆகும். மேலும், இதிலுள்ள கார்போஹைட்ரேட்ஸ்ஸும் வைட்டமின்களும் பசியுணர்வை அதிக நேரம் கட்டுப்படுத்தி எடை குறைப்பிற்கு உதவுவதுடன், மெட்டபாலிசத்தை சரிவர நடைபெறச் செய்து சக்தியின் அளவை உயர்த்தவும் செய்கின்றன.

பாதம், வால்நட் போன்ற கொட்டைகளில் புரோட்டீன் அளவு அதிகம் உள்ளது. இவற்றிலுள்ள தாவர காம்பௌண்ட் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள், ஃபிரி ரேடிகல்கள் மூலம் உண்டாகும் ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கின்றன. அதன் மூலம் இதய நோய், கேன்சர், முன் கூட்டியே வரும் முதுமைத் தோற்றம் போன்றவை வராமல் தடுக்கப்படுகின்றன.

பீன்ஸ், கொண்டைக் கடலை போன்ற பயறு மற்றும் பருப்பு  வகைகளில் புரதத்தின் அளவு ஏராளம். இது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையளவு மற்றும் கொழுப்பின் அளவையும் சமநிலைப்படுத்தி டைப் 2 டயாபெட் வரும் நிலையைத் தடுக்கிறது. நூறு கிராம் பீன்ஸில் சுமார் 28 கிராமும், கொண்டைக் கடலையில் 15 கிராம் புரோட்டீன்களும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் சுகாதாரப் பராமரிப்பு!
Nutritious protein-rich foods

சியா சீட்ஸ்களிலுள்ள புரோட்டீன் எடையைக் குறையச் செய்து, பராமரிக்கவும் செய்கிறது. எலும்பு ஆரோக்கியம் காக்கவும் இதய நோய் வருவதைத் தடுக்கவும் செய்கிறது. ஃபிரி ரேடிகல்களையும் வீக்கத்தையும் குறைக்கிறது. இரத்த சர்க்கரையளவை கட்டுக்குள் வைக்கிறது. முப்பத்தைந்து கிராம் சியா விதையில் ஆறு கிராம் புரோட்டீன் உள்ளது.

தாவர புரோட்டீன்களும் நார்ச்சத்தும் நிறைந்துள்ள பச்சைப் பட்டாணியை உண்பதால் பசியுணர்வை குறைக்கக்கூடிய சில வகை ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கிறது. ஒரு கப் பட்டாணியில் ஒன்பது கிராம் புரோட்டீன் உள்ளது.

பீட்டா க்ளுக்கோன் என்ற கரையும் நார்ச்சத்தும் அதிகளவு புரோட்டீனும் கொண்டது ஓட்ஸ். அத்துடன் ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள், மினரல்களும் அதிகம் உள்ளன. ஓட்ஸ் உண்பதால் உடலின் பல உறுப்புகள் சிறந்த முறையில் செயல்பட முடிகிறது. ஒரு கப்  ஓட்ஸில் ஆறு கிராம் புரோட்டீன் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com