பயனுள்ள 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!

10 Useful Grandma Remedies
Grandma Remedies
Published on

ன்றைய அனைத்து நோய் பாதிப்புகளுக்கும் மருத்துவரிடம்தான் தீர்வு காண வேண்டும் என்பது இல்லை. மருந்து, மாத்திரை இன்றி பாட்டி வைத்தியம் மூலம் எளிதில் சில உடல் பிரச்னைகளை குணமாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய பயனுள்ள 10 பாட்டி வைத்தியக் குறிப்புகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. சளி: குப்பைமேனி இலையின் சாறை தேனில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி கரைந்துவிடும்.

2. அல்சர்: சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை அரைத்து மோரில் கலந்து குடித்தால் அல்சர் புண் ஆறும்.

3. சரும நோய்: குப்பைமேனி இலையை அரைத்து மஞ்சள் கலந்து சருமத்தில் பூசி வந்தால் சரும நோய் விரைவில் குணமாகும்.

4. நோய் எதிர்ப்பு சக்தி: பெரிய நெல்லிக்காயை பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

5. நீரிழிவு: வெந்தயத்தை பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

6. முடி உதிர்வு: செம்பருத்தி பூ மற்றும் சீகைக்காயை உலர்த்தி பொடியாக்கி தலைக்கு அப்ளை செய்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகமாகும்.

7. உடல் உஷ்ணம்: அருகம்புல்லை உலர்த்தி பொடியாக்கி நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.இரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

இதையும் படியுங்கள்:
வைக்கோல் காய்ச்சலின் அறிகுறிகள் தெரியுமா?
10 Useful Grandma Remedies

8. புகை பழக்கம் கட்டுப்பட: வில்வ இலையை உலர்த்தி பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் புகைப்பழக்கம் கட்டுப்படும். நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படும்.

9. தேமல்: இரண்டு பூண்டு பற்கள் மற்றும் ஒரு வெற்றிலையை அரைத்து தேமல் மீது பூசினால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.

10. மலச்சிக்கல்: எலுமிச்சை சாறில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் மலக்குடலில் தேங்கிய கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.

மேற்கண்ட பாட்டி வைத்திய குறிப்புகளை செய்தாலே நோய்கள் கட்டுப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com