நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும் 10 வகை காய்கறிகள்!

உற்சாகமான மனநிலை
உற்சாகமான மனநிலை
Published on

நாம் உண்ணும் உணவும் காய்கறிகளும் உடலுக்கு ஊட்டத்தையும் ஆற்றலையும் தரும். நம்மை நாள் முழுவதும் உற்சாகமாகவும் ஆற்றலுடன் செயல்படவும் உதவும் பத்து வகையான காய்கறிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. பசலைக்கீரை: இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது. உடலில் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கிறது. நாள் முழுவதும் உற்சாகமாக வைக்கிறது.

2. சர்க்கரை வள்ளிக்கிழங்கு: இனிப்பு உருளைக்கிழங்கு என்று அழைக்கப்படும் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்தும் கார்போஹைட்ரேடுகளும் அதிகம். எனவே, அதிக நேரம் வேலை செய்தாலும் களைப்படையச் செய்யாமல் உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் பணிபுரிய உதவுகிறது.

3. ப்ராக்கோலி: இதில் உள்ள வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலேட் சத்து உடலையும் உள்ளத்தையும் ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வழங்குகிறது.

4. முட்டைக்கோஸ்: இதில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் இரும்புச்சத்து உள்ளன. இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஆரோக்கியமாக வைப்பதுடன் நாள் முழுக்க சோர்வின்றி, உற்சாகமாக இருக்கவும் உதவும்.

5. கேரட்: இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து விரைவில் களைப்படைய வைக்காது. உடலுக்கு நிறைந்த ஆற்றலைத் தரும். மேலும், கண்பார்வை மேம்பாடு, பளபளவென்ற சருமம் ஆகியவற்றையும் இது அளிக்கிறது.

6. பீட்ரூட்: பீட்ரூட்கள் தசைகளுக்கு சீரான இரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்துகின்றது. இது உடல் செயல்பாடுகளின் போது சகிப்புத்தன்மையும் ஆற்றலையும் அதிகரிக்கும். நாள் முழுக்க வேலை செய்தாலும் களைப்பை நீக்கி  உற்சாகத்தை தரும்.

7. குடைமிளகாய்: இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. அதனால் இரும்புச்சத்தை உடல் சிறப்பாக உறிஞ்சி ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
அறுபது வயதானாலும் சிறுபிள்ளையாகவே இருக்கிறேன்!
உற்சாகமான மனநிலை

8. அஸ்பாரகஸ்: வைட்டமின் ஈ சத்து அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. இது எலும்புகளை வலிமையாக வைக்க உதவுவதுடன், இரத்த உறைவதையும் தடுக்கும். மேலும் வைட்டமின் பி நிறைந்த அஸ்பாரகஸ், உண்ணும் உணவை உடலில் ஆற்றலாக மாற்ற உதவுகிறது. நரம்பு மண்டலத்தை ஆதரிப்பதால் உற்சாகமாக வேலை செய்ய வைக்கிறது.

9. காலிஃப்ளவர்: இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடலின் ஆற்றல் உற்பத்திக்கு உதவுவதோடு செரிமானத்திற்கும் வழி வகுக்கிறது. இதனால் உற்சாகமாக ஒருவரால் வேலை செய்ய முடியும்.

10. அவகோடா: இது ஒரு பழம் என்றாலும் சமையல் அடிப்படையில் காய்கறியாக கருதப்படுகிறது. இந்த வெண்ணெய் பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் பொட்டாசியம் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது ஒரு நிலையான ஆற்றலை வழங்குகிறது. மேலும், மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது மனதை உற்சாகமாகவும் வைக்கிறது. செய்யும் செயலில் கவனத்தை ஈர்க்க வைக்கிறது. எனவே, இந்த காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்துக் கொண்டால் நாள் முழுக்க உற்சாகமுடன் வேலை செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com