தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

Honey and cinnamon
Honey and cinnamonhttps://www.medicalnewstoday.com

சிலர் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் லவங்க மரத்தை வளர்க்க முயற்சிக்கிறார்கள். பட்டை மரத்தை இரண்டு வருடங்களுக்கு வளர விட்டு பின் அதை கிளை நறுக்கி பட்டை செழிக்கச் செய்யப்படுகிறது. அடுத்த வருடம் சுமார் 12 துளிர்களில் இருந்து அவற்றின் பட்டைகள் நீக்கப்பட்டு மெல்லிய உள்பட்டை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு மீட்டர் நீள லவங்கப்பட்டை துண்டுகள் காய்ந்து சுருள்கள் ஆகின்றன. இந்த சுருள்கள் பல பட்டைகளை உள்ளடக்கியது. விற்பனைக்காக ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் நீளமுள்ளவையாக இது வெட்டப்படுகின்றன. பொதுவாக, லவங்கப்பட்டை சாக்லேட், ஆப்பிள் பை, டோனட்ஸ், சூடான கோகோ, மதுபானங்கள் என பல உணவுப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. லவங்கப்பட்டை தேனோடு சேர்ந்து தரும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* லவங்கப்பட்டையை நன்றாகப் பொடித்து ஒரு ஸ்பூன் லவங்கப் பொடி, ஒரு ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் சுடு தண்ணீர் சேர்த்து பிசைந்து வலி உள்ள இடத்தில் பற்று போட்டால் உடனே மூட்டு வலி குறையும். இதை தினமும் காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி முழுமையாக குறையும்.

* லவங்கப் பவுடரை இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, சாப்பிடுவதற்கு முன் உட்கொண்டால் கடின உணவு ஜீரணமாகிவிடும்.

* ஒரு டேபிள் ஸ்பூன் சுத்தமான தேன், ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டை பவுடரைக் கலந்து படுக்கைக்குச் செல்லும் முன் முகத்தில் தடவி காலை எழுந்தவுடன் வெந்நீரில் கழுவினால் இரண்டு வாரங்களில் முகப்பரு ஓடிப்போகும்.

* லவங்க பவுடரை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலையில் சாப்பிட்டால் உடலில் சக்தி கூடும். தலைமுடியில் குளிப்பதற்கு முன் தேய்த்து குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

* ஒரு டேபிள் ஸ்பூன் சூடான தேனுடன் நாலு ஸ்பூன் லவங்க பவுடரை கலந்து காலையிலும் மாலையிலும் மூன்று நாட்களுக்கு சாப்பிட்டால் சளி, இருமல், சைனஸ் தொல்லைகள் அகலும்.

* ஒரு ஸ்பூன் லவங்க பவுடரை ஒரு ஸ்பூன் தேன் கலந்து பல் வலி உள்ள இடத்தில் தினமும் மூன்று வேளை தடவினால் பல் வலி நீங்கி விடும்.

* இரண்டு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் கொலஸ்ட்ரால் இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் குறையும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
Honey and cinnamon

* வயிற்று வலி, அல்சர், வாய்வு பிரச்னை ஆகியவற்றிற்கு தேன், லவங்கப்பட்டை பவுடர் உட்கொண்டால் குணம் பெறலாம்.

* தேனும் லவங்கப்பட்டையும் நமது வெள்ளை இரத்த நாளங்களை பலப்படுத்தும். இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் பெருகும்.

* தேன், லவங்கப் பட்டை பவுடரை ஒரு கோப்பை தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னும், இரவில் உறங்க செல்வதற்கு முன்பும் தினமும் உட்கொண்டு வந்தால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

* ஒரு சிட்டிகை லவங்க பவுடரை அரை ஸ்பூன் தேனுடன் கலந்து பல் ஈறுகளில் அடிக்கடி தடவினால் அது உமிழ்நீருடன் உட்சென்று மலட்டு தன்மையை நீக்குகிறது என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com