வெறும் வயிற்றில் புதினா நீர் குடிப்பதால் ஏற்படும் 11 நன்மைகள்!

Mint water benefits
Mint water benefits
Published on

புதினா - வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவம் கொண்ட இயற்கை மருத்துவ முறையில் முக்கிய இடம்பெற்ற மூலிகை ஆகும். இவ்வளவு சிறப்பு பெற்ற புதினாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் வடிகட்டி வெறும் வயிற்றில் பருகுவதை புதினா நீர் என்கிறோம் இதன் பயன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

புதினா பயன்கள்:

1. செரிமான கோளாறு இருப்பவர்கள் புதினா நீரை பருகி வர உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுப்பதோடு, செரிமானத்துக்கும் உதவுகிறது.

2. புதினா நீர் வாய்வு, வயிறு உப்புசம் ஆகியவற்றை போக்குவதோடு, செரிமான தசைகளை ரிலாக்ஸ் ஆக்கி, குடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.

3. புதினா தண்ணீரில் இருக்கக்கூடிய மெந்தோல் சுவாசப்பாதையை சரி செய்து ஜலதோஷம் ஏற்படும் நேரத்தில் ஏற்படக்கூடிய மூக்கடைப்பை சரி செய்கிறது.

4. புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து சூடு ஆறிய பிறகு  குடித்தால் புத்துணர்ச்சியை உணரலாம்.

5. புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் தனித்துவமான குளிர்ச்சியான உணர்வு தருவதால் புதினா தேநீர், மதுபானங்கள், இனிப்பு வகைகள் இன்னும் பல உணவுப் பண்டங்களில் மூலப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

6. வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை குறைக்க புதினா தண்ணீர் உதவுவதோடு,புதினா தண்ணீர் குடித்து வரும்போது அது பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி நாள்முழுவதும் சுவாச புத்துணர்ச்சியை ஊட்டுகிறது.

7. ஆயுர்வேத மருத்துவத்தில் புதினா நீர் மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியை உண்டாக்குவதில் பெரும் பங்காற்றுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

8. புதினாவில் கலோரிகள் குறைவு என்பதாலும் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும் என்பதாலும் புதினா நீரை உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி பருக உடல் எடை விரைவில் குறையும்.

9. புதினா தண்ணீரில் உள்ள மெந்தோல்  எரிச்சலை ஏற்படுத்தும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை குணமாக்கி அஜீரண பிரச்னைகளையும் போக்குகிறது.

இதையும் படியுங்கள்:
பற்களின் எனாமலுக்கு வலிமை சேர்க்கும் சூயிங்கம்!
Mint water benefits

10. கால் கப் புதினா நீரில் 12 கலோரிகள், 8 மில்லி கிராம் சோடியம் காணப்படுகிறது. இதில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், ஃபைபர், சர்க்கரை சத்து எதுவுமே இல்லை. மேலும், ஆக்ஸிஜனேற்றிகள், இரும்புச்சத்து, மாங்கனீஸ் சத்து, போலேட் சத்துக்களும் காணப்படுகின்றன.

11. புதினா தண்ணீரில் உள்ள வைட்டமின் கே , கண்புரை, வயிற்றுப்போக்கு, மார்பக புற்றுநோய், டயரியா போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

புதினா நீரை வெறும் வயிற்றில் குடித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com