பற்களின் எனாமலுக்கு வலிமை சேர்க்கும் சூயிங்கம்!

Eating benefits of chewing gum
Eating benefits of chewing gum
Published on

சூயிங்கம் என்றவுடன் நமக்குப் பள்ளிப் பருவம்தான் ஞாபகத்துக்கு வரும். ஏனென்றால், அந்தப் பருவத்தில்தான் நாம் சூயிங்கம் அதிகமாக சாப்பிட்டு இருப்போம். அப்பாவிடம் அடம்பிடித்து சூயிங்கம் வாங்கித் தரச் சொல்லி சாப்பிடும்பொழுது, ‘அது வேண்டாம். உடலுக்கு கேடு’ என்று நம்மை மிரட்டி வைப்பார். உண்மையிலேயே சூயிங்கத்தில் எந்த நன்மைகளுமே இல்லையா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

உமிழ் நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது: நீங்கள் சூயிங்கம் மெல்லும்பொழுது அதிக அளவிலான உமிழ்நீர் உற்பத்தி ஆகிறது. வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களால் வெளியிடப்படும் ஆபத்தான அமிலங்களை சமநிலைப்படுத்த இந்த உமிழ்நீர் உதவுகிறது.

சுவாசப் புத்துணர்ச்சி அளிக்கிறது: சர்க்கரை இல்லாத சூயிங்கம் மெல்லும்போது, அது பற்களில் உள்ள உணவுத் துகள்கள் அல்லது பாக்டீரியாக்களை நீக்குவதன் மூலமாக சுவாசத்தைப் புத்துணர்ச்சியை அடையச் செய்கிறது.

பிளேக் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது: பிளேக் என்பது பற்கள் மற்றும் ஈறுகளின் மீது படியும் ஒரு ஒட்டும் தன்மை கொண்ட பாக்டீரியாக்கள் ஆகும். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் இதனால் பற்சிதைவு மற்றும் ஈறுகள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம். சூயிங்கம் மெல்லுவது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக வாயில் தங்கி இருக்கும் உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது.

பற்களின் எனாமலுக்கு வலிமை சேர்க்கிறது: ஒருசில சர்க்கரை இல்லாத சூயிங்கத்தில் காணப்படும் சைலிட்டால் என்ற இயற்கை இனிப்பானது பற்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக் கூடியது. சைலிட்டால் பற்களின் எனாமலுக்கு வலிமை சேர்த்து பற்சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது: சூயிங்கம் மெல்லுவதால் அதிகப்படியான உமிழ்நீர் உற்பத்தியாகிறது. மேலும், செரிமான அமைப்பானது தூண்டப்படுகிறது. இதன் காரணமாக செரிமான ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நகர்ப்புறங்களில் வசிப்போரும் பறவைகள், பட்டாம்பூச்சிகளுக்கு உதவலாம்!
Eating benefits of chewing gum

மன அழுத்தம் குறைக்கிறது: மனதிற்கு ஒரு அமைதியான விளைவை அளிப்பதன் மூலமாக மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து ஒருவரை விலக்கி வைக்கிறது.

உடனடி ஆற்றல்: சூயிங்கம் மெல்லும்பொழுது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் நரம்பு அமைப்புகள் தூண்டப்படுகிறது. இதன் காரணமாக உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது.

சூயிங்கம் சாப்பிட்டால் நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். அதை ஒரு துண்டு பேப்பரில் சுற்றி குப்பைத் தொட்டியில் போட வேண்டும். யாருடைய கால்களிலும் மற்றும் ஷூக்கள், செருப்புகளிலும் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com