
கண் அரிப்பு, நீர்வடிதல் மற்றும் எரிச்சலைப் போக்கி கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த பானம் எது தெரியுமா?
பாதாம் பருப்பு, சோம்பு மற்றும் கல்கண்டு இவற்றைச் சேர்த்து அரைத்து அதை வெதுவெதுப்பான பாலில் கலந்து ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் சேர்த்து உட்கொள்ள கண் பார்வை தெளிவு பெறும். இரவில் படுக்கும் முன் பால் அருந்துவது வழக்கம். இந்த பாலை உட்கொள்வதால் அழற்சியைப் போக்கி கண்ணை நன்கு ஆரோக்கியமாக்கும்
வெது வெதுப்பான பாலில் கல்கண்டு பாதாம் மற்றும் சோம்பு பொடி செய்தோ அல்லது அரைத்தோ பாலில் கலந்து உட்கொள்வது ஆயுர்வேத வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளது. இது இயற்கையாகவே கண்ணில் உள்ள திசுக்களை பாதுகாப்பாக வைத்து கண்புரை நோயைத் தடுத்து காக்கும். சோம்பில் உள்ள ஏ சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் கண் சோர்வை போக்கும். பாதாமில் ஈ சத்து மற்றும் ஒமேகா 3 அமிலம் கண் திசுக்களை காக்கும். மேலும் கற்கண்டில் குளிர்ச்சி பண்பு உள்ளதால் அழற்சியை போக்கி கண் பிரச்சனைகளைத் தடுக்கும்.
பூசணி ஜுசுடன் எலுமிச்சை ஜுஸ் கலந்து உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்.
வெண்பூசணி ஜுசுடன் எலுமிச்சை ஜுஸ் கலந்து காலையில் குடிப்பதால் உடல் நச்சுக்கள் நீக்கப்படும். இதனால் உடல் வெப்பம் குறையும். உடல் கொழுப்புக்களை நீக்கும்.
இந்த பானத்தில் 96 சதவீதம் நீர்சத்து உள்ளது. காலையில் இதை குடிப்பது நல்லது. தூக்கத்திற்கு பின் உடலில் நீர்ச்சத்து குறைவதால் இதை உட்கொள்ளும் போது துர்சத்து சேரும். இது எலெக்ட்ரோலைட்டையும் சமச்சீராக்குகிறது.
வெண்பூசணி புத்தி கூர்மைக்கும் சிறந்தது. பதட்டம் அழுத்தத்தைக் குறைத்து மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
இரண்டிலும் ஆன்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. மேலும் வெண்பூசணி யில் பி1, பி3, கால்சியம் மற்றும் துத்தநாகச்சத்தும் உள்ளன. இதனால் ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் குறைத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. வெண்பூசணியின் குளிர்ச்சி பண்பு அல்சரைக் கட்டுப்படுத்தி அதிக வெப்பத்தை தடுக்கிறது. உடல் இக்கோடையில் சூடாவதைத் தடுக்க மிகச் சிறந்த பானமாக இது கருதப்படுகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)