
அதிகமான சர்க்கரை உட்கொள்வது உடல் நலனில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்வீட்டுகளில் மட்டும் இனிப்பு என்றில்லாமல், தினந்தோறும் நாம் சாப்பிடும் உணவுகள் முதல் குடிபானங்கள் வரை இனிப்பு அதிகமாக இருக்கும். அந்த வகையில் நீங்கள் சர்க்கரைக்கு அடிமையானதை காட்டும் 4 அறிகுறிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. சோம்பேறித்தனமாக உணர்வீர்கள் :
ரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்ந்தாலும் அல்லது குறைந்தாலும், இதனால் உடலின் ஆற்றல் அளவு குறைந்து, மிகவும் சோம்பேறித்தனமாக உணருவீர்கள். மேலும் செய்யும் வேலையில் கடும் எரிச்சல் ஏற்பட்டு, தொடர்ச்சியாக ஒரு செயலை கூட முழுமையாக, முழு மனதோடு செய்ய இயலாத பெரும் பிரச்னையைத் தரலாம். அப்பொழுது தினமும் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
2. மனநிலையில் எதிர்மறை தாக்கம் :
சர்க்கரை அதிகமாக இருந்தால் அதாவது ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகமானாலும் அல்லது குறைந்தாலோ மனநிலை எதிர்மறையாக பாதிக்கப்பட்டு எரிச்சல், பதற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவையெல்லாம் சர்க்கரைக்கு அடிமையாகி விட்டதை காட்டும் அறிகுறிகள் ஆகும்.
3. ஸ்வீட்டை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற வெறி :
தொடர்ச்சியாக இனிப்பு சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால் சர்க்கரைக்கு அடிமையாகி விட்டதாக அர்த்தம். ஏனென்றால், நீங்கள் அதிகளவில் சர்க்கரையை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றும் உங்களுக்கு சர்க்கரையை இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டுவிட்டது எனலாம்.
4. உடல் எடை எக்குத்தப்பாக ஏறினாலும் :
உடல் எடை எக்குத் தப்பாக எதிர்பார்க்காத அளவிற்கு கூடினாலும் சர்க்கரைக்கு அடிமையாகி விட்டதாகத்தான் அர்த்தம். ஏனென்றால் அதிகமாக சர்க்கரையை சாப்பிடுவதனால் கொழுப்பு கரைவது குறையும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளில் அதிக கலோரிகள் இருப்பதால், கலோரி கரைவது குறைந்து, கலோரிகள் கொழுப்பாக மாறி உடலில் தங்கிவிடும். இதனால் ஊட்டச்சத்துக்கள் குறைவான சர்க்கரை உணவுகளை அதிகமாக சாப்பிடுவீர்கள். உடல் எடையும் இதனால் அதிகமாகும். இவற்றைத் தவிர்க்க சர்க்கரையை குறைவாக சாப்பிடுவதே சிறந்த வழி.
மேற்கண்ட 4 அறிகுறிகளும் நீங்கள் சர்க்கரைக்கு அடிமையாகி விட்டீர்கள் என்பதை உணர்த்துவதால் அதிலிருந்து விடுபட தேவையான முயற்சிகளை செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.