வாய் துர்நாற்றத்தைப் போக்க 4 எளிய வழிமுறைகள்!

4 simple ways to get rid of bad breath
Bad breath
Published on

வாய் துர்நாற்றம் பலருக்கு சங்கடத்தை உண்டுப் பண்ணும் ஒரு பிரச்னையாகும். இதனால் மற்றவர்களிடம் தைரியமாக பேசக்கூட சிலர் தயங்குவார்கள். இந்தப் பதிவில் வாய் துர்நாற்றத்தை போக்கும் 4 எளிய வழிமுறைகளைப் பற்றிக் காண்போம்.

வாயிலிருந்து துர்நாற்றம் வருவதற்கான மிக முக்கிய காரணம் Poor oral hygiene ஆகும். நாம் உணவு சாப்பிட்டுவிட்டு சரியாக வாய்க் கொப்பளிக்கவில்லை என்றால் நம் வாயில் இயற்கையாகவே சில பேக்டீரியாக்கள் இருக்கும். அந்த பேக்டீரியாக்கள் இந்த உணவுப்பொருட்களை Process செய்து VSC (Volatile sulphur compounds) என்று சொல்லப்படும் Hydrogen sulphide, Methyl mercaptan போன்ற காம்பவுண்ட்களை இந்த பேக்டீரியா உருவாக்குவதால் தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.

வாயில் கேவிட்டிஸ் இருப்பதாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். Gum disease என்று சொல்லப்படும் ஈறுகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.  சிலருக்கு வாய் எப்போதும் வறட்சியாகவே இருக்கும். வாயில் எச்சில் சுரக்கும் போது அது பேக்டீரியாக்களை  வயிற்றுப்பகுதிக்கு கொண்டு செல்ல உதவும். ஆனால் வாய் வறட்சி உள்ளவர்களுக்கு எச்சில் சரியாக சுரக்காததால் வாயில் இந்த பேக்டீரியாக்கள் அதிகமாகி வாய் துர்நாற்றம் வரலாம். எனவே, கண்டிப்பாக தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.

சிலருக்கு நாக்கில் வெள்ளையாக கோட்டிங் போன்று அமைந்திருக்கும். அதை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். புகைப்பிடிக்கும் பழக்கம், புகையிலை போடும் பழக்கமும் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. எனவே, இதுப்போன்ற பழக்கங்களை கட்டாயம் குறைக்க வேண்டும்.

பூண்டு, வெங்காயம் போன்றவற்றில் இயற்கையாகவே சல்பர் காம்பவுண்ட் உள்ளது. இது வாயில் அசௌகரியமான துர்நாற்றத்தை உருவாக்கும். Liver problem, kidney problem உள்ளவர்களுக்கும் வாய் துர்நாற்றம் அதிகமாகலாம். இதற்கான தீர்வு என்னவென்பதைப் பார்க்கலாம்.

  1. நம்முடைய வாயில் பல் சொத்தை போன்ற பிரச்னைகள் இருக்கும் போது அதற்காக கட்டாயம் ஒரு நல்ல பல் மருத்துவரை பார்த்து தீர்வுக் காண்பது நல்லதாகும்.

  2. சாப்பிட்ட பிறகு நன்றாக வாய்க் கொப்பளிப்பது, இரண்டு வேளை நன்றாக பிரஷ் செய்வது 75 சதவீதம் Volatile sulphur compounds உருவாவதை தடுக்கிறது. ஆகவே, Oral hygieneஐ சரியாக பின்பற்றினாலே வாய் துர்நாற்றம் வெகுவாக குறையும்.

  3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் மவுத் வாஸ்ஸை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். சாதாரண தண்ணீரில் வாய்க் கொப்பளிப்பதே வாய் துர்நாற்றம் உண்டாக்கும் பேக்டீரியாக்களை ஒழிக்கும். வாயில் இருக்கு கெட்ட பேக்டீரியாக்களை அழிக்க நல்ல பேக்டீரியாக்களான Probiotics என்று சொல்லும் lacto bacillus, streptococcus, salivarius போன்றவை மருந்துகளாக கிடைக்கிறது. அதைப் பயன்படுத்துவதன் மூலமாக வாய் துர்நாற்றத்தை போக்க முடியும்.

  4. புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்கள் அவற்றை குறைக்க வேண்டும். இதுப்போன்று வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவது வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

இதையும் படியுங்கள்:
உணவை வேகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கா? போச்சு!
4 simple ways to get rid of bad breath

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com