உணவை வேகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கா? போச்சு!

Food - Health
Food - Health
Published on

நாம் தினமும் உண்ணும் உணவுகளை நிறுத்தி, நிதானமாக சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும். உணவை பொறுமையாக மென்று சாப்பிடுவதே ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அப்போது தான் உணவின் சுவையை அறிந்து முழுதிருப்தியுடன் உண்ண முடியும். தற்போது உள்ள அவசர வாழ்க்கை முறையில் உணவை வேகமாக சாப்பிடும் பழக்கம் நம் அனைவருக்குமே இருக்கிறது. இந்தப் பதிவில் உணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னவென்பதைப் பற்றி காண்போம்.

1. உணவை வேகமாக சாப்பிடுவது உடல் பருமனை அதிகரிக்கிறது. வேகமாக சாப்பிடுவதால் எவ்வளவு உணவை சாப்பிட்டோம் என்ற அளவை சரிவர கணிக்க முடியாது. இதனால் நமக்கு தேவையான அளவை தாண்டி உணவை சாப்பிட்டு விடுவதால், அது நம் ஹார்மோனில் மாற்றம் ஏற்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

2. மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்படும் அபாயத்தை உண்டாக்கும். வேகமாக உணவை சாப்பிடும் போது அது diaphragm மற்றும் வயிற்றுப்பகுதியில் அழுத்தத்தை உண்டாக்குவதால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

3. உணவை அவசரமாக சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உடலால் சரியாக உறிஞ்சிக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.

4. உணவை நன்றாக மென்று கூழாக்கி உள்ளே அனுப்பும் போது எளிதாக ஜீரணமாகும். இதுவே அவசர அவசரமாக சாப்பிடும் போது பெரிய துண்டுகள் உள்ளே செல்வதால் ஜீரணக்கோளாறு ஏற்படும், உணவு செரிப்பதற்கு நேரமாகும்.

5. வேகமாக சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உண்டாக காரணமாகிறது. வேகமாக சாப்பிடுவது இரைப்பை அழற்சியை வருவதற்கு காரணமாக அமைகிறது. இதனால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். வேகமாக சாப்பிடும் போது அதிகமாக காற்று உள்ளே செல்வதால், வயிற்றில் அதிகமாக வாயு உண்டாகும். அதிக அளவு உணவை ஜீரணிக்க அதிக அளவிலான அமிலம் சுரக்கப்படுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.

6. வேகமாக உணவை சாப்பிடுவதால், Metabolic syndrome என்னும் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிகமான சர்க்கரை, கொலஸ்ட்ரால் ஆகியவை ஏற்படுவதால் இதய சம்மந்தமான பிரச்னை, ஸ்ட்ரோக், டயாபிடிஸ் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, உணவை சாப்பிடும் போது சின்ன சின்ன பகுதிகளாக எடுத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

இதையும் படியுங்கள்:
மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் 8 அன்றாட பழங்கங்கள்!
Food - Health

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com