4 things to avoid during rainy and cold seasons
4 things to avoid during rainy and cold seasons

மழை மற்றும் குளிர் காலங்களில் அவசியம் தவிர்க்க வேண்டிய 4 விஷயங்கள்!

Published on

ழைக்காலம் தொடங்கி விட்டது. அடுத்தது, குளிர்காலம். இந்த இரண்டு காலங்களிலுமே நாம் குறிப்பாக உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருந்தால் அடுத்து வரும் நாட்கள் நமக்கு ஆரோக்கியமான நாட்களாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குளிர் காலத்தில் சில பொருட்களைத் தவிர்ப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனென்றால், குளிர்காலத்தில் சளி பிடிப்பது மற்றும் சரியான செரிமானம் இல்லாமை போன்றவற்றால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க கீழ்க்கண்ட 4 பொருட்களைத் தவிர்த்தால் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

1. குளிர் பானங்கள்: உங்களுக்கு குளிர் பானங்கள் மீது அலாதி பிரியம் இருக்கலாம். ஆனால், ஏற்கெனவே சில்லென்று இருக்கும் இந்த குளிர் காலத்தில் நீங்கள் இந்த காற்றடைக்கப்பட்ட குளிர் பானங்களை பருகும்போது அதில் உள்ள சர்க்கரை உடலின் இன்சுலினை மட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் வேலையை செய்கிறது. மேலும், வெளிப்புற சூழ்நிலை ஏற்கெனவே வெப்பநிலை குறைந்திருக்கும்போது, நம் உடலுக்கு வெப்பம் தேவைப்படும் நேரத்தில் குளிர்ந்த பானத்தை உட்கொள்ளும்போது உடலின் உட்புற வெப்பநிலையும் குறைகிறது. இவற்றிற்கு பதிலாக சூடான சூப் வகைகளை குடிக்கலாம்.

2. பால் பொருட்கள்: பாலில் இருந்து பெறப்படும் தயிர், மில்க் ஷேக் ஆகியவற்றை குளிர் காலங்களில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை உடலில் அதிக சளியை உண்டாக்குவதோடு இருமல், ஜலதோஷம் ஆகிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. ஒருவேளை அவற்றைத் தவிர்க்க முடியவில்லை எனில் மதிய உணவிற்கு முன்னர் பால் பொருட்களை எடுத்துகொள்ளலாம். ஆனால், முடிந்தவரை பாலை மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் பொருட்களை குளிர்காலத்தில் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
அஷ்ட லட்சுமிகளும் குடியிருக்கும் தலைவாசலின் சிறப்பு!
4 things to avoid during rainy and cold seasons

3. வறுத்த உணவு: குளிர் காலத்தில் சுடச் சுட பஜ்ஜி, பக்கோடா போன்ற எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களை உண்பதற்கு இயற்கையாகவே ஆர்வம் உண்டாகும். ஆனால், முடிந்த அளவு இந்த உணவுப் பொருட்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும். அதில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் செரிமான பிரச்னைகளை உண்டாக்குவதோடு உடலில் சளி உற்பத்தியாவதைத் தூண்டுகிறது. குளிர் காலம் முடியும் வரை இந்த உணவுப் பொருட்களை உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

4. ஹிஸ்டமைன் உணவு: தக்காளி, காளான் போன்ற ஹிஸ்டமைன்கள் அதிகம் உள்ள பொருட்களை குளிர் காலத்தில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவையும் உடலில் சளி உற்பத்தியாவதை அதிகரிக்கும். இவற்றிற்கு பதிலாக பச்சை காய்கறிகளையும் கீரை வகைகளையும் உணவில் சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com