புதினா நீரின் 5 அற்புத நன்மைகள்!

Mint water
புதினா நீர்

டல் சூட்டை தணிக்க உதவும் பானங்களுள் ஒன்று புதினா தண்ணீர். இது ஆரோக்கியமான பானம் மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளித்து புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது. புதினா நீர் தரும் ஐந்து அற்புதமான நன்மைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

புதினாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் வடிகட்டி வெறும் வயிற்றில் பருகுவதே புதினா நீர் ஆகும். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுப்பதோடு செரிமானத்துக்கும் உதவுகிறது.

செரிமான கோளாறுகள் இருப்பவர்கள், உணவில் புதினா நீரை சேர்த்து பருகி வர, செரிமான பிரச்னைகள் சீராகும். வாய்வு, வயிறு உப்புசம் ஆகியவற்றை போக்குகிறது. செரிமான தசைகளை ரிலாக்ஸ் ஆக்கி, குடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.

உடலில் டெஸ்டோஸ்ரோன் அளவை குறைத்து, ஹார்மோன் சமநிலையைப் பேண புதினா தண்ணீர் உதவுகிறது. இது ஹார்மோன் அளவை பராமரிக்கவும் உதவுகிறது. இது பிசிஓஎஸ்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

1. உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது: உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு நீர்ச்சத்து அவசியம். உடலை நீர்ச்சத்தோடு வைத்துக்கொள்ள புதினா தண்ணீர் உதவுகிறது. அதுமட்டுமின்றி, சரிவிகித உணவுக்கு தனிச்சுவையையும் கொடுக்கிறது.

2. மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது: ஆயுர்வேத மருத்துவத்தில் மன அழுத்தத்தைக் குறைப்பதில் புதினா பெரும் பங்காற்றுகிறது. மனதை அமைதியுடன் வைத்துக்கொள்வதற்கு உதவும் ஒரு மருந்தாகும் புதினா. இது உடலை குளிர்வித்து, மனதை அமைதியாக்கும் திறன் கொண்டதாகும்.

இதையும் படியுங்கள்:
கேரம்போலா பழத்திலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Mint water

3. உடல் எடையை குறைக்க உதவுகிறது: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் அடிக்கடி புதினா தண்ணீரை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. மேலும், புதினா நீரை பருகும்போது வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். இதனால், அதிகளவு சாப்பிடுவது கட்டுப்படுகிறது. எனவே, உடல் எடை குறைய உதவுகிறது.

4. நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது: புதினாவில், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள தாவர அடிப்படையிலான வைட்டமின்கள், செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. அத்துடன், வெளியில் இருந்து எந்த நோய்கிருமிகளும் உடலின் உள்ளே நுழையாமல் காக்கிறது.

5. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: புதினாவில் வைட்டமின் ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் நிறைய உள்ளதால் இது சருமத்தை காக்க உதவுகிறது. புதினா தண்ணீரில், பூஞ்சைக்கு எதிரான குணங்கள் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான குணங்கள் இருப்பதால் முகத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் முகப்பருக்களை குறைக்க உதவுகிறது.

புதினா தண்ணீரை பருகும்போது, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. எனவே, சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மிளிர்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com