கேரம்போலா பழத்திலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

கேரம்போலா பழம்
Carambola fruithttps://ta.healthy-food-near-me.com

கேரம்போலா (Carambola) எனவும், ஸ்டார் ஃபுரூட் எனவும் அழைக்கப்படும் இந்தப் பழம் வெப்ப மண்டலப் பிரதேசத்திலும் மலைப் பகுதிகளிலும் கிடைக்கக்கூடியது. இதன் வித்தியாசமான தோற்றத்திற்காகவும் சுவைக்காகவும் பலரும் இதை விரும்பி வாங்கி உண்கின்றனர். இதில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இது ஒரு குறைந்த கலோரி அளவு கொண்ட பழம். நார்ச்சத்து அதிகம் உடையது. சரிவிகித உணவின் ஒரு பகுதியாய் இதை சேர்த்து உண்ணும்போது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். பசி ஏற்படும் இடைவெளியையும் அதிகரிக்கும். இதனால் எடை பராமரிப்பில் கவனம் உள்ளவர்கள் உண்ண ஏற்ற பழமாக இது விளங்குகிறது.

அதிக நீர்ச்சத்து கொண்டது ஸ்டார் ஃபுரூட். அதே சமயம் கொழுப்புச் சத்து குறைவான பழமும் கூட. மேலும், இதில் எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்களும், வைட்டமின் B, C, இரும்புச் சத்து, பொட்டாசியம், ஃபிளவனாய்ட் ஆகிய சத்துக்களும் உள்ளன. இவை இதய இரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் காக்க உதவுகின்றன.

இயற்கையான முறையில் ஸ்டார் ஃபுரூட்டில் இருக்கும் ஆக்சாலிக் (Oxalic) ஆசிட் கிட்னி பிரச்னை போன்ற மெடிக்கல் கண்டிஷன் உள்ளவர்கள் இந்தப் பழத்தை உண்ணக் கூடாததாக ஆக்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
பேசுங்க… ஆனால், பேசாதீங்க!
கேரம்போலா பழம்

இதிலுள்ள அதிகளவு நார்ச் சத்து வயிற்றிலுள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுவதால் செரிமானம் சிறப்பான முறையில் நடைபெறும். மலச்சிக்கல் நீங்கும். கரையும் நார்ச் சத்து கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இந்தப் பழத்தை உட்கொண்ட பின் சில பேருக்கு பக்க விளைவாக ஒவ்வாமை, வாந்தி மற்றும் ந்யூரோலாஜிகல் பிரச்னை கூட உண்டாகலாம். ஏற்கெனவே ஹெல்த் பிரச்னை உள்ளவர்கள் இந்தப் பழத்தை உண்பதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது நன்மை பயக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com