Vendaikai water
Vendaikai water

உடலில் மாயாஜாலம் செய்யும் வெண்டைக்காய் நீரின் 5 பலன்கள்!

Published on

வெண்டைக்காய் நமக்கு வருடம் முழுவதும் கிடைக்கும் ஒரு காய். இதற்கு சீசன் என்று எதுவும் இல்லை. அப்படி ஆண்டு முழுவதும் கிடைக்கும் இந்த வெண்டைக்காயை நாம் முறையாகப் பயன்படுத்தினால் ஆரோக்கியமாக வாழலாம். தினமும் ஒரு வெண்டைக்காயை பொடியாக நறுக்கி இரவு தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் எடுத்து அதைப் பருகுங்கள். பிறகு பாருங்கள், உங்கள் உடலில் ஏற்படும் ஆச்சரியமான மாற்றங்களை. வெண்டைக்காய் நீரின் மிக முக்கியமான 5 மருத்துவப் பயன்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ஊட்டச்சத்து நிறைந்தது: குறைவான கலோரி கொண்ட வெண்டைக்காயில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், மாக்னீசியம் போன்ற தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகியவை நிறைந்துள்ளன. வெண்டைக்கய் ஊற வைத்த நீரை பருகுவதன் மூலம் நீர்த்த வடிவத்தில் இந்த சத்துகள் அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கின்றன.

2. செரிமான ஆரோக்கியம்: வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. வெண்டைக்காய் ஊற வைத்த நீரை பருகுவதன் மூலம், இது மலமிளக்கியாக செயல்பட்டு சீரான இடைவெளியில் மலம் கழிவதற்கு வழிவகை செய்கிறது.

3. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்: ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் வெண்டைக்காய் உதவியாக இருப்பதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் கூறுகின்றன. வெண்டைக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமானப் பாதையில் உள்ள குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதை மெதுவாக்குவதற்கு உதவுகிறது. இதன் மூலம் உங்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.

இதையும் படியுங்கள்:
எமதர்மராஜா நசிகேதனுக்கு அளித்த மூன்று வரங்கள் தெரியுமா?
Vendaikai water

4. நீர்ச்சத்து: உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் திரவ பானங்களை குடிக்க வேண்டுமென விரும்பினால் சுவை மிகுந்த வெண்டைக்காய் நீரை பருகுங்கள். இது உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும்.

5. ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள்: நமது உடலை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் ஃப்ரீரேடிக்கல்ஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட் வெண்டைக்காயில் அதிகளவு உள்ளது. நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் உடலின் பல்வேறு செயல்பாடுகளிலும் இந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தொடர்ந்து ஒரு மாதம் குடித்துப் பாருங்கள். உங்கள் உடலில்  ஆரோக்கியத்தில் மாயாஜாலம் செய்யும் இந்த வெண்டைக்காய் நீர்.

logo
Kalki Online
kalkionline.com