தற்போது உள்ள காலக்கட்டத்தில் மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ், கவலை, வேலை நெருக்கடி போன்ற பிரச்னைகளால் பலர் தூக்கத்தை தொலைத்து விட்டு அவதிப்படுகிறார்கள். நாம் உண்ணும் உணவுப்பழக்கத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலமாக நன்றாக தூங்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அத்தகைய தூக்கத்தை தூண்டும் உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இரவு தூங்க செல்வதற்கு முன் இரண்டு கிவி பழம் சாப்பிவது தூக்கத்தை நன்றாக தூண்டும். இந்த பழத்தில் போலேடே என்ற ஒருவகை வைட்டமின் பி, செரோடோனின், ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளன. அவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன.
பால் பொருட்களை உட்கொள்வது தூக்கத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தூங்க செல்லும் நேரத்தில் பால் குடிப்பதால் எந்த நன்மையும் இல்லை. அதற்கு பதில் கால்சியம் நிறைந்த பால் பொருட்களை மற்ற நேரங்களில் எடுத்துக் கொள்வது தூக்கத்தை அதிகரிக்கும்.
டோபு போன்ற சோயா உணவுகளில் இருக்கும் ஐசோ பிளேவோன்களை அதிகமாக உட்கொள்வது ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஐசோ பிளேவோன்கள் தூக்கத்தை மேம்படுத்தும். தினமும் தூங்க செல்லும் முன் சோயா பால் எடுத்துக் கொள்ளலாம். உணவில் சோயா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
பாதாம் தூக்கத்தை ஊக்குவிக்கும் குணங்காளைக் கொண்டது. பிஸ்தாவில் தூக்கத்தை தூண்ட உதவும் வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன. இது மெலடோனின் ஹார்மோன்கள் செயல்பாட்டை மேம்படுத்தி நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
வாரம் மூன்று முறை மத்தி, கானாங்கெழுத்தி, சால்மன் போன்ற மீன்களை சாப்பிடுவதால் நல்ல தூக்கம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த மீன்களில் வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது தூக்கத்தை தூண்டும் சிறந்த உணவாகும். இந்த 5 உணவுகளை எடுத்துக்கொண்டால் நிம்மதியான தூக்கத்தை பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)