செரிமானத்தை சீராகப் பராமரிப்பது, ஆற்றலை சேமிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்யும் உடலில் முக்கிய உறுப்பு கல்லீரல். கல்லீரலில் வீக்கம், பசியின்மை, வயிற்று வலி, மலத்தில் இரத்தக்கசிவு, சிறுநீரின் நிறம் மாறுதல் போன்ற பிரச்னைகள் கல்லீரல் பாதிப்பின் முக்கியமான அறிகுறிகளாகும்.
அதிகப்படியாக மது அருந்துவதும் மோசமான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமற்ற உணவுகளும் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் கல்லீரலை இயற்கையாக சரி செய்ய உதவும் 5 வகை உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. எலுமிச்சை: எலுமிச்சையில் வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் உள்ளதால், கல்லீரலை சுத்தம் செய்து, கல்லீரலில் சேரும் அழுக்குகளை அகற்றி உடலில் உள்ள நச்சுகளை நீக்குகின்றது. எலுமிச்சை உட்கொள்வதால் கல்லீரல் நொதிகளை செயல்படுத்துவதற்கும் அவை புத்துயிர் பெறுவதற்கும் உதவுவதோடு, காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது கல்லீரலுக்கு நன்மை அளிக்கக்கூடியதாக உள்ளது.
2. மஞ்சள்: மஞ்சளில் குர்குமின், ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளதால், கல்லீரல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், புத்துயிர் அளிக்கவும் உதவுவதோடு, கல்லீரலில்இருந்து நச்சுகளை அகற்றி அதன் செயல்பாடுகளை பராமரிக்க உதவுகிறது.
3. கேரட்: கேரட்டில், பீட்டா கரோட்டின் மற்றும் தாவர ஃபிளாவனாய்டுகள் உள்ளதால், இந்த இரண்டு கூறுகளும் கல்லீரலின் செயல்பாட்டை எளிதாக்குகின்றன. மேலும், நச்சுகளால் கல்லீரல் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதோடு நோய்களில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கவும் உதவி புரிகின்றன.
4. கீரை: கீரை மற்றும் பச்சை இலை காய்கறிகளில் உள்ள இரும்புச் சத்து, ஃபோலேட் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் கல்லீரலுக்கு மிகவும் நன்மை அளிப்பதோடு, கீரை செரிமானத்தை மேம்படுத்தி கல்லீரல் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
5. பீட்ரூட்: பீட்ரூட்டில் பீடைன் எனப்படும் ஒரு தனிமம் உள்ளதால், இது கல்லீரல் பாதிப்பை சரிசெய்து அதில் சேர்ந்துள்ள நச்சுகளை நீக்க உதவுவதோடு, பீட்ரூட்டை தினமும் சாப்பிடுவது அல்லது அதன் சாறு குடிப்பது கல்லீரல் நோய்களை விரைவில் சரிசெய்ய உதவும்.
மேற்கூறிய ஐந்து வகை உணவு பொருட்களும் கல்லீரலை பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுவதால் முடிந்தவரை இதை சாப்பிட்டு பலன் அடைவோம்.