இந்திய மூலிகை மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு (amla) தனி இடம் உண்டு. நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது .மேலும் ஆன்டி ஆக்சிடென்ட்கள், இயற்கையான குளிர்ச்சித் தன்மை ஆகியவை உள்ளதால் சரும பளபளப்பு, இளமையாக வைத்திருப்பது, செரிமான கோளாறுகளை நீக்குவது, கருமையான முடி ஆகியவற்றிற்கு உதவி புரிகிறது . இவ்வளவு சிறப்பு வாய்ந்த நெல்லிக்காயை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது இந்த நன்மைகள் அனைத்தும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அந்த வகையில் நெல்லிக்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 5 உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்:
1. பால் மற்றும் பால் தயாரிப்புகள்:
நெல்லிக்காயில் உள்ள அமிலத்தன்மை (acidic nature) பால் வகைகளில் அதிக அளவில் உள்ள கால்சியம் மற்றும் புரதத்துடன் எதிர்வினையை ஏற்படுத்தி, செரிமான கோளாறுகள், வயிறு உப்புசம், ஒவ்வாமை, சரும அலர்ஜி போன்றவற்றை உருவாக்கும். அதோடு மூச்சுத் திணறல், வயிற்று கோளாறு, முகத்தில் பரு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் பால் பொருட்களான பால் ,தயிர், பன்னீர், பாலாடை ஆகியவற்றுடன் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது .
2. மீன் மற்றும் இறைச்சி வகைகள் :
நெல்லிக்காயில் உள்ள புளிப்புத் தன்மை, இறைச்சி வகைகளில் உள்ள உயர் புரதம் ஆகியவை இணைந்து பாக்டீரியா வளர்ச்சி, பித்த நோய்கள் ஆகியவை சேர்ந்து செரிமானத்தில் சிக்கல் ஏற்படுத்தும். இதனால் வாந்தி, குமட்டல், வாசனை வாய்ந்த வியர்வை, அஜீரணம் ஆகியவை ஏற்படும் என்பதால் சிக்கன் மீன் ,மட்டன், முட்டை ஆகியவற்றுடன் மறந்தும் நெல்லிக்காயை சேர்த்து சாப்பிடக்கூடாது.
3. அதிக காரமான, வெப்பம் தரும் உணவுகள் :
நெல்லிக்காயில் உள்ள குளிர்ச்சி தன்மை, அப்பளம், சாம்பார், காரக் குழம்பு, பெருங்காயம் அதிகம் உள்ள உணவுகள் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலில் ஒட்டுமொத்த சமநிலையை கலைக்கிறது. இதனால் உடல் வேதனை, மூட்டு வலி, முகச்சோர்வு ஆகியவை ஏற்படுவதோடு உடலில் வெப்பம் உயர்வது, வாய்ப்புண், வாயு குளிர்ச்சி, ரத்த அழுத்த மாறுபாடு ஆகியவை ஏற்படும் என்பதால் அதிக காரமான உணவுகளுடன் நெல்லிக்காயை தவிர்க்க வேண்டும்.
4. பழச்சாறுகள் (fresh fruit juices)
நெல்லிக்காயை வாழைப்பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெரி ஜூஸ், மாம்பழ ஜூஸ் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் நெல்லிக்காயில் உள்ள அமிலத்தன்மை இந்த பழங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது குடல் பாகங்களை பாதிக்கிறது. சில நேரங்களில் இது பித்தத்தை தூண்டி, ஜீரணக் கோளாறு வாந்தி , மலச்சிக்கல் ,நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பதால் மேற்கண்ட பழச் சாறுகளுடன் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது .
ஆரோக்கிய குறைபாடுகளைத் தவிர்க்க 30 நிமிட இடைவெளிக்குப் பிறகு மேற்கூறிய உணவுகளை சாப்பிடலாம்.