
"பழங்களின் ராஜா" என்று அழைக்கப்படும் மாம்பழம், அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களுக்காக உலகம் முழுவதும் விரும்பப்படும் ஒரு பழமாகும். வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள மாம்பழம், பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால், மாம்பழம் சாப்பிட்ட பிறகு சில உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு செய்யும்போது, உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
1. தயிர்:
மாம்பழம் சாப்பிட்டவுடன் தயிர் சாப்பிடுவது பொதுவாகத் தவிர்க்கப்பட வேண்டும். மாம்பழம் சூடான தன்மை கொண்டது, அதே சமயம் தயிர் குளிர்ச்சியானது. இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து சாப்பிடும்போது, செரிமானப் பிரச்சனைகள், நெஞ்செரிச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற உபாதைகள் ஏற்படலாம். சிலருக்கு வயிற்று வலி அல்லது வாயு தொல்லையும் ஏற்படக்கூடும்.
2. காரமான உணவுகள்:
மாம்பழம் இயற்கையாகவே சூடான தன்மையைக் கொண்டது. மாம்பழம் சாப்பிட்ட பிறகு, காரமான உணவுகளை உட்கொண்டால், உடலில் உஷ்ணம் அதிகரித்து, அஜீரணம், வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக, ஏற்கனவே செரிமான மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள், மாம்பழம் சாப்பிட்ட பிறகு காரமான உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிட்டவுடன், உடனே குளிர்பானங்கள் அல்லது குளிர்ந்த நீர் அருந்தும் பழக்கம் பலரிடம் உண்டு. ஆனால், இது செரிமான மண்டலத்திற்கு நல்லதல்ல. மாம்பழம் சாப்பிட்ட பிறகு, செரிமான செயல்பாடு சாதாரணமாக நடைபெற வேண்டும். குளிர்ந்த நீர் அல்லது குளிர்பானங்கள், இந்த செரிமான செயல்முறையை மெதுவாக்கி, ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படுவதைத் தடுக்கலாம்.
4. கசப்பான உணவுகள்:
மாம்பழத்தின் இனிப்புச் சுவைக்கு நேர்மாறாக, கசப்பான உணவுகள் செரிமான மண்டலத்தில் வேறுவிதமாக செயல்படும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு, பாகற்காய் போன்ற கசப்பான உணவுகளை உட்கொள்வது, அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தூண்டலாம்.
5. எண்ணெய் பண்டங்ள்:
மாம்பழம் செரிமானத்திற்கு எளிதான ஒரு பழம். ஆனால், மாம்பழம் சாப்பிட்ட பிறகு, அதிக எண்ணெய் உள்ள பண்டங்கள் சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு கூடுதல் சுமையைக் கொடுக்கும். இந்த உணவுகள் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, மாம்பழத்துடன் சேர்ந்து வயிற்றுப் பிரச்சனைகளை உருவாக்கலாம்.
மாம்பழம் ஒரு அற்புதமான பழம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை சரியான முறையில் சாப்பிடுவது அவசியம். மாம்பழம் சாப்பிட்ட பிறகு, மேற்கூறிய ஐந்து உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம், செரிமானப் பிரச்சனைகளைத் தவிர்த்து, மாம்பழத்தின் முழு நன்மைகளையும் பெறலாம்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)