55 வயதைக் கடந்தவர்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்! 

5 foods to avoid for people over 55!
5 foods to avoid for people over 55!
Published on

55 வயதைக் கடந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைக்கின்றனர் எனலாம். ஓய்வு பெறுதல் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுதல் மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் போன்ற புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் இது வழங்குகிறது. இந்த வயதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். 55 வயதைக் கடந்தவர்கள் தங்கள் உணவில் சில வகையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை சில நோய்களின் அபாயத்தை அதிகரித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். 

1. அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு கலோரிகள் கொழுப்புகள் மற்றும் சோடியம் இருக்கும். இதனால், எடை அதிகரிப்பு, இதய நோய், நீரிழிவு மற்றும் பிற ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 55 வயதை கடந்தவர்கள் இந்த வகையான உணவுகளைக் குறைத்து பழங்கள் காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். 

2. சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் அதிக அளவு கொழுப்புகள் நிறைந்திருக்கும். இது இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும். எனவே, கொழுப்பு குறைந்த இறைச்சி வகைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அல்லது வாரத்திற்கு ஒரு முறை சிவப்பு இறைச்சி சாப்பிடுவது ஆரோக்கியமானது. 

3. அதிக கொழுப்புள்ள பால், வெண்ணெய் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு, கொலஸ்ட்ரால் நிறைந்திருக்கும். இது இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்ககூடும் என்பதால், இத்தகைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

4. எண்ணெயில் பொரித்த உணவுகளை வயதானவர்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய உணவுகளில் அதிக கலோரி, கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்து காணப்படுவதால், எடை அதிகரிப்பு மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எண்ணெயில் வறுத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதைக் குறைத்து வேகவைத்த, சுட்ட உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். 

இதையும் படியுங்கள்:
முகம் பளபளக்க இந்த உணவு பொருட்களே போதும்… பார்லரே போக வேண்டாம்!
5 foods to avoid for people over 55!

5. அதிகபடியாக மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்பு, இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கான அபாயம் அதிகரிக்கிறது. எனவே, 55 வயதை கடந்தவர்கள் மது அருந்தும் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இது உங்களது ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதித்து, மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 

55 வயதுக்கு பிறகு ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதைத் தவிர்த்து உங்கள் ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும் உணவுகளை உட்கொண்டு நலமுடன் இருக்க முயற்சிக்கவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com