தற்கால இளவயதினருக்கு நாற்பது வயதைக் கடக்கும் நிலையிலேயே தலையில் கிரே ஹேர் (Grey Hair) எனப்படும் வெள்ளை முடி தோன்ற ஆரம்பித்து விடுகிறது. அதைப் பார்த்ததும், ‘அச்சச்சோ, நரை முடியா’ என அதிர்ந்து அதற்கு என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். மெலனின் என்ற நிறமி நம் உடலில் சருமம், முடி மற்றும் கண்ணின் கோராய்டு உறை ஆகியவற்றில் உள்ளது. இது முடி, சருமம் மற்றும் கண்களுக்கு கருமை நிறத்தைத் தர உதவுவது. மெலனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நரையை தள்ளிப்போகச் செய்யும் சில வகை உணவுகள் இந்தப் பிரச்னை தீர உதவும். அப்படிப்பட்ட 5 வகை உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. மீன், முட்டை, பீன்ஸ்: புரோட்டீன் சத்து அதிகம் உள்ள இந்த வகை உணவுகளில் கேராடின் என்ற பொருள் உள்ளது. இது முடிக்கு அதிகளவு மெலனின் தருவதுடன் சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர் வீச்சுகளிலிருந்தும் முடியை பாதுகாக்க உதவும்.
2. டார்க் சாக்லேட்: இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் A, B, C, D, E ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. வைட்டமின் C மற்றும் Dயானது மெலனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து இள வயதில் நரை உண்டாவதைத் தடுக்க உதவும்.
3. அவகோடா: இதிலுள்ள வைட்டமின் E சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர் வீச்சு முடிக்கு ஏற்படுத்தும் தீங்குகளிலிருந்து அவற்றைப் பாதுகாக்கவும் முடியில் நரை ஏற்படுவதைத் தள்ளிப்போடவும் உதவும்.
4. வைட்டமின் B12 சப்ளிமெண்ட்: இது ஸ்ட்ரெஸ்ஸினால் கிரே ஹேர் உண்டாவதைத் தடுக்க உதவும். சிக்கன், முட்டை, மீன் மற்றும் பால் பொருட்களில் வைட்டமின் B12 அதிகம் உள்ளது.
5. கேரட், பாதாம், பீநட், காளான் மற்றும் பயறு வகைகள்: இந்த உணவுகள் மெலனின் அளவை அதிகரிக்க உதவுபவை. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் மற்றும் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முடியைக் கருமையாக்க உதவுவதோடு, மெலனின் அளவை அதிகரிக்கவும் செய்யும்.
இவை தவிர, வைட்டமின் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ள சிட்ரஸ் வகைப் பழங்கள், ஸ்வீட் பொட்டட்டோ, சில வகை தாவர விதைகள், பச்சை இலைக் காய்கறிகள், பெரி வகைப் பழங்கள் ஆகியவையும் முடிக்கால்களை சுற்றியுள்ள நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடியை பலமாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவும்.