மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாத 7 உணவுகள் எவை தெரியுமா?

மீண்டும் சூடு படுத்தக்கூடாத உணவுகள்
மீண்டும் சூடு படுத்தக்கூடாத உணவுகள்
Published on

லகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு என்பது அடிப்படையான தேவைகளில் ஒன்று. அதிலும் ஆரோக்கியமான உணவுகளை தேடிப்பிடித்துதான் உண்ண வேண்டிய நிலைமையில் தற்போது நாம் இருக்கிறோம். நமது முன்னோர்கள் சாப்பிட்ட உணவில் இருந்த சத்துக்களில் இப்போது பாதிதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகளும், ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளும், மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் உணவுகளும் நமக்கு நஞ்சாக மாறி விடுகின்றன. அந்த வகையில் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக் கூடாத 7 உணவு வகைகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. பிரியாணி: நம் அனைவருக்கும் பிடித்த உணவு என்றால் அதில் பிரியாணிதான் முதலிடத்தில் இருக்கும். ஆதலால் நாம் அனைவரும் செய்யும் மிகப்பெரிய தவறு பிரியாணியை சூடு படுத்தி சாப்பிடுவது. இப்படிச் சாப்பிடும்போது நமது உணவு மண்டலம் வெகுவாக பாதிப்படைந்து உடல் நலம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

2. கீரைகள்: அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கியது என்றால் அதில் கீரை வகைகள்தான் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இருப்பினும், எந்த வகை கீரையாக இருந்தாலும் அதை சூடு படுத்தி சாப்பிடும்போது ஃபுட் பாய்சனாக மாறி விடுகிறது.

3. முட்டை உணவு: முட்டை உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான புரதம் அதிக அளவில் இருக்கிறது. ஆனால், முட்டையை வைத்து செய்யப்பட்ட உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்டால் அது வாயு கோளாறுகளை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதித்து விடுகிறது.

4. உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது கலோரிகள் குறைவாக இருந்தாலும், இவற்றை வேகவைத்து சாப்பிடுவதுதான் சிறந்தது. உருளைக்கிழங்கு பயன்படுத்தி சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் அவை உடலுக்குத் தீங்காக மாறி விடுகிறது.

5. கோழி: கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இதை சரியாக சமைக்காமல் சாப்பிட்டால் நமது உடலில் பாக்டீரியாக்கள் சேரும். அதைவிட மிகவும் முக்கியம் கோழியால் செய்த உணவுகளை திரும்பத் திரும்ப சூடு படுத்தும்பொழுது பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கிறது.

இதையும் படியுங்கள்:
நம் வீட்டு சமையலறையிலேயே இருக்கும் இயற்கைக் கொசு விரட்டிகள்!
மீண்டும் சூடு படுத்தக்கூடாத உணவுகள்

6. காளான்: காளானில் உள்ள செலினியம் எலும்புகளின் உறுதித் தன்மையை ஊக்குவிக்கிறது. இரும்பு சத்து அதிகம் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் காளான் உணவை மீண்டும் மீண்டும் சூடு படுத்துவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற வயிற்று பிரச்னைகளை உண்டாக்கி உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கிறது.

7. பீட்ரூட்: இரும்புச்சத்து, வைட்டமின் பி12 சத்துகளை கொண்டிருக்கும் பீட்ரூட் கிழங்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இந்த பீட்ரூட்டை பயன்படுத்தி சமைத்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பொழுது அவை விஷமாக மாறிவிடும்.

பொதுவாக, உணவுகளை அப்போதைக்கு அப்போது சமைத்து சாப்பிடுவதுதான் சிறந்தது. தவறும் பட்சத்தில் மேற்கூறிய உணவுகளை எக்காரணத்தை முன்னிட்டும் சூடு படுத்தி சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com