உயிர் வாழ்வதற்கு இதயம் எவ்வளவு முக்கியமோ, அதேபோலத்தான் சிறுநீரகங்களும் மிகவும் முக்கியமான உறுப்பு. நம் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது சிறுநீரகம். ஆனால், அந்த கழிவுகள் முழுமையாக வெளியேறுகிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு பல காரணங்கள் உண்டு.
நாம் சரியாக தண்ணீர் அருந்தாமல் இருப்பது, உணவுப் பழக்க வழக்கங்கள் என பல காரணங்களால் சிறுநீரகத்தில் இருக்கும் கழிவுகள் வெளியேறாமல் தேங்கி நின்று அது பிற்காலத்தில் மிகப்பெரிய பிரச்னையை கொடுக்கும். சரி எப்படித்தான் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது? கீழ்க்காணும் இந்தப் பழங்களை சாப்பிட்டால்போதும் சிறுநீரகத்தில் இருக்கும் கழிவுகள் மிகச் சுலபமாக வெளியேறிவிடும்.
1. அன்னாசி: பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கவும் சிறுநீரக ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.
2. ஆப்பிள்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரையே பார்க்க வேண்டாம் என்று கூறுவார்கள். ஆப்பிள்களில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது சிறுநீரகத்தின் செயல்பாட்டை ஆதரிக்க உதவுகிறது மற்றும் சிறுநீரக நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரையை குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
3. ஆரஞ்சு: இந்த பிரகாசமான நிறம் கொண்ட பழத்தில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளன. இது சிறுநீரக செயல்பாட்டை பராமரிக்கவும், உடலில் உள்ள திரவங்களை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
4. மாதுளை: மாதுளையின் சாறு மற்றும் விதைகள் இரண்டிலும் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகக் கற்களை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். பொட்டாசியம் சிறுநீரின் அமிலத்தன்மையைக் குறைக்கிறது, அஸ்ட்ரிஜென்ட் பண்புகளால் கல் உருவாவதைத் தடுக்கிறது, தாதுக்களின் படிகமாக்கலைக் குறைக்கிறது மற்றும் சிறுநீரகத்திலிருந்து நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது.
5. பேரீச்சம்பழம்: பேரீச்சம்பழத்தை 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, விதைகளை அகற்றிய பின் சாப்பிடும்போது, அது சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றும். பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், பேரீச்சம்பழத்தில் உள்ள மக்னீசியம் மூலப்பொருள் சிறுநீரகத்தையும் சுத்தப்படுத்துகிறது.