சருமத்தில் ஏற்படும் மருக்கள் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்றினால் ஏற்படுகின்றன. இவை பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பதுடன், சில சமயங்களில் வலி மிகுந்ததாகவும் இருக்கலாம். பலர் மருக்களை நீக்க மருத்துவமனை அல்லது பியூட்டி பார்லர்களை நாடுகின்றனர். ஆனால், அதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதால், பலர் தயங்குகின்றனர். நம் பாட்டிகள் காலத்திலிருந்து பின்பற்றப்படும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மருக்களை இயற்கையாகவும், செலவு இல்லாமலும் நீக்கலாம். அப்படிப்பட்ட 5 பாட்டி வைத்திய முறைகளை இங்குப் பார்க்கலாம்.
1. வெங்காயமும் உப்பும்:
வெங்காயம் மற்றும் உப்பு கலவை மருக்களை நீக்க மிகவும் பிரபலமான வீட்டு வைத்தியமாகும். வெங்காயத்தில் உள்ள சல்பர், உப்பில் உள்ள ஆன்டிசெப்டிக் பண்புகள் மருக்களை உலர்த்தி, உதிரச் செய்கின்றன.
சின்ன வெங்காயத்தை சிறிதாக வெட்டி, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும்.
அரை ஸ்பூன் வெங்காய சாற்றுடன் சிறிதளவு தூள் உப்பைச் சேர்த்து பசை போல் கலக்கவும்.
காட்டன் துணியை சிறிய துண்டுகளாக வெட்டி, வெங்காய சாற்றில் நனைத்து மருவின் மீது ஒத்தடம் போல் வைக்கவும்.
காட்டன் துணி காய்ந்ததும், புதிய துணியை நனைத்து வைக்கவும். சாறு முடியும் வரை இவ்வாறு செய்யவும்.
பிறகு, அந்த காட்டன் துணியை மருவின் மீது வைத்து பிளாஸ்தர் போட்டு ஒட்டவும்.
சுமார் 7 மணி நேரம் கழித்து பிளாஸ்தரை அகற்றவும். மரு உதிர்ந்து விடும்.
2. பூண்டு:
பூண்டில் உள்ள ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் மருக்களை நீக்க உதவுகின்றன.
2 பல் பூண்டை தோலுரித்து பேஸ்ட்டை உருவாக்கவும்.
இந்த பேஸ்ட்டை மருக்கள் மீது தடவி, பருத்தி அல்லது பேண்டேஜால் மூடவும்.
25-30 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும்.
இதை சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் வேரோடு நீங்கும்.
3. வாழைப்பழம் தோல்:
வாழைப்பழத் தோலின் உட்புறத்தில் உள்ள பொட்டாசியம் மருக்களை உலரச் செய்து நீக்க உதவுகிறது.
இரவு தூங்கும் முன் வாழைப்பழத் தோலின் உட்பகுதியை மருவின் மீது வைத்து, பேண்டேஜ் போட்டு ஒட்டவும்.
காலையில் பேண்டேஜை அகற்றவும்.
இதை தினமும் செய்து வந்தால் மருக்கள் விரைவில் குணமாகும்.
4. அன்னாசி பழச்சாறு:
அன்னாசி பழச்சாற்றில் உள்ள புரோமலைன் என்ற நொதி, மருக்களைக் கரைக்க உதவுகிறது.
பஞ்சு அல்லது காட்டன் துணியை அன்னாசி பழச்சாற்றில் நனைத்து மருவின் மீது தடவவும்.
துணியால் கட்டி சில மணி நேரம் கழித்து கழுவவும்.
இதை தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் மறையும்.
5. ஆப்பிள் சீடர் வினிகர்:
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் மருக்களை எரிக்க உதவுகிறது.
ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து, காட்டன் துணியை நனைத்து மருவின் மீது தடவவும்.
பேண்டேஜ் போட்டு இரவு முழுவதும் விடவும்.
காலையில் பேண்டேஜை அகற்றவும்.
இதை சில நாட்கள் தொடர்ந்து செய்தால் மருக்கள் உதிர்ந்து விடும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய முறைகள் சிலருக்கு பலனளிக்காமல் போகலாம். மருக்கள் பெரியதாகவோ அல்லது வலி மிகுந்ததாகவோ இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. நீரிழிவு நோய் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் இந்த வைத்திய முறைகளை முயற்சிக்கும் முன் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.