சஞ்சீவினி மூலிகைக்கு ஈடான பப்பாளி இலையின் 5 அதி முக்கிய பயன்கள்!

பப்பாளி இலை....
பப்பாளி இலை....Image credit p-krishijagran.com
Published on

-ம. வசந்தி

ப்பாளி இலைச் சாறு அதன் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக உள்ளது. குறிப்பாக கொரோனா காலத்தில் காய்ச்சலுக்கு மருந்தாக நாட்டு மருத்துவர்களால் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம்பெற்ற தாவர வகைகளில் ஒன்று தான் இந்த பப்பாளி இலை. சஞ்சீவினி மூலிகைக்கு ஈடான மருந்தாக கருதப்பட்ட இந்த இலையின் சாறுகள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகின்றன

பப்பாளி இலையில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. இ, கே, பி ஆகியவையும் உள்ளன. பப்பாளி இலை சாற்றின் சில ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதை தயாரிப்பதற்கான எளிய வழிகள் இதோ.

டெங்கு நிவாரணம்

டெங்கு காய்ச்சலுடன் தொடர்புடைய அறிகுறிகளை குணப்படுத்த பப்பாளி இலைச்சாறு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. டெங்குவின்  அறிகுறிகளான காய்ச்சல், சோர்வு, தலைவலி, குமட்டல், தோல் வெடிப்பு மற்றும் வாந்தி. சில கடுமையான சந்தர்ப்பங்களில், இது குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையையும் ஏற்படுத்தும். இது இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால்  உயிரிழப்பு ஆபத்துக்கள் அதிகம். டெங்கு நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பப்பாளி இலைச்சாறு இரத்தத்தில் பிளேட்லெட் அளவை கணிசமாக அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டது.

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை

பப்பாளி இலைச்சாறு நீரிழிவு நோய்க்கு இயற்கை மருந்தாக பயன்படுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது. . பப்பாளி இலையின் சாற்றில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் இதனை குடிப்பது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதத்திலிருந்து பாதுகாப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

செரிமான பிரச்சனைகள்

இரைப்பை, உடல் பருமன் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகளை குறைக்க பப்பாளி இலை தேநீர் பயன்படுகிறது. பப்பாளி இலையில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களை ஜீரணிக்கக்கூடியது. இது மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல்போன்ற அறிகுறிகளைப் போக்கவும் உதவுகிறது. தசை வலி, மூட்டு வலி உள்ளிட்ட உள் மற்றும் வெளிப்புற வலிகளுக்கு பப்பாளி இலையின் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

முடி வளர்ச்சி

பப்பாளி இலையின் சாற்றை உச்சந்தலையில் தடவுவது முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. பப்பாளி இலையின் சாற்றை கூந்தலின் தடவினால் பொடுகு பிரச்சனை நீங்கும் உடலில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் முடி உதிர்வை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
பெங்காலி ஸ்பெஷல் ரசகுல்லா-நேந்திரம் சிப்ஸ் வீட்டிலேயே செய்யலாம் வாங்க!
பப்பாளி இலை....

சருமப் பாதுகாப்பு

பப்பாளி இலையை சாறு எடுத்து தோலில் தடவலாம். இதில் புரதத்தை கரைக்கும் என்சைம் உள்ளது. இது  அழுக்கு மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இது தோல் துளைகள் மற்றும் முகப்பருவின் அடைப்பு பிரச்சனையை குறைக்க உதவுகிறது. தோல் சுருக்கத்தை நீக்கி வயதான தோற்றத்தை தள்ளிப் போடும் தன்மை இந்த பப்பாளி இலை சாற்றுக்கு உள்ளது.

பப்பாளி ஜூஸ் செய்முறை

பப்பாளி இலை சாறு தயாரிக்க, பப்பாளி இலைகளை நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கலந்து அரைக்க வேண்டும். இதை வடிகட்டினால் இப்போது சாறுதயார். மற்றொரு  முறையாக 2 லிட்டர் தண்ணீரில் 10- 15  பப்பாளி இலைகளை கொதிக்க வைத்து தண்ணீர் பாதியாக வந்தவுடன் உட்கொள்ளலாம். குடிக்க முடியாது என்று நினைப்பவர்கள் சிறிது உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கலாம். இது ஒரு நாளைக்கு மூன்று முறை சிறிய அளவுகளில் எடுக்கப்பட வேண்டும். பப்பாளி பழச்சாறு அதிகமாக குடிப்பதால் கல்லீரலை பாதிக்கிறது. மிகக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com