குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் நல்ல சத்தான உணவுகள் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை தர வேண்டியது ஒவ்வொரு தாய்மார்களினுடைய கடமையாகும். இதனால் குழந்தைகளின் மூளை நன்றாக வளர்ச்சி பெற்று அறிவாற்றலுடன் திகழ்வார்கள். அதற்கு குழந்தைகளுக்கு தரக்கூடிய உணவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய சத்தான குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கக்கூடிய 5 உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிக அளவு கேல்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின் டி உள்ளது. இது குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அறிவுத்திறனை பெருக்கும். மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். நரம்பு மண்டலம் சீராக இருந்தாலே மூளை அறிவுத்திறனுடன் வேலை செய்யும். எனவே, குழந்தைகளுக்கு பாலால் ஆன உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம்.
வல்லாரை, கீரை வகையை சேர்ந்தது. நியாபக சக்தியை அதிகரித்து, மூளைக்கு பலம் கொடுப்பது மட்டுமில்லாமல் மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கண்டிப்பாக குழந்தைகளுக்கு வாரத்திற்கு 2 முறையாவது வல்லாரை கீரை கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் மூளையின் பலம் அதிகரிக்கும்.
பாதாம் பருப்பில் குழந்தைகளுக்கு தேவையான ஒமேகா ஃபேட்டி ஆசிட் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இது மூளையின் செயல்பாட்டை திறம்பட வைக்கும். மூளைக்கு சக்தி அதிகமாக தூண்டப்பட்டு நினைவாற்றலை அதிகரிக்கும். குழந்தையின் மூளையின் செல்களில் உள்ள குறைகளை சரிசெய்து அவர்களின் அறிவுத்திறன் உள்ள குழந்தையாக மாற்றும். அதுமட்டுமில்லாமல் குழந்தையின் மன ஆரோக்கியத்திற்கும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலுக்கு தேவையான பல சத்துக்கள் முட்டையில் நிறைந்திருக்கிறது. முட்டையில் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடன்ட், புரதச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான உணவாக இருக்கிறது. குழந்தைகள் எப்போதும் விழிப்புணர்வோடு செயல்பட உதவியாக இருக்கும்.
வெண்பூசணியில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. இதில் நேர்மறை சக்திகள் அதிகமாக இருக்கிறது. இது குழந்தைகளை சாந்தப்படுத்துவதாக இருக்கும். மூளைத்திறனை அதிகப்படுத்தும். பிராண சக்தி அதிகமாக கிடைப்பதால் தெளிவாக யோசிப்பதும், தெளிவாக செயல்படுவதற்கும் உதவியாக இருக்கும். அத்துடன் மூளைத்திறனை கூர்மையாக்கி அறிவாற்றலையும், நினைவுத்திறனையும் அதிகரிக்கும். இந்த உணவுகளை குழந்தைகளுக்கு தொடர்ந்துக் கொடுக்கும் போது கண்டிப்பாக குழந்தைகளின் மூளைத்திறன் தூண்டப்பட்டு எல்லாவற்றிலும் அறிவாற்றலுடன் செயல்படுவார்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)