இயற்கை வேகங்களை அடக்குவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரியுமா?

nature's call
nature's call
Published on

டல் செயல் இயக்கத்தால் உண்டாகும் இயற்கை வேகங்களை எக்காரணம் கொண்டும் அடக்கக் கூடாது. நடைமுறையில் பெரும்பாலும் சிறுவர்கள் பள்ளியிலும், பெரியவர்கள் அலுவலகங்களிலும் என பொதுவெளியில் அதிக நேரம் இருக்க வேண்டியுள்ளது.

உடலின் செயல் இயக்கங்களால் வெளியாகும் இயற்கை வேகங்களை அடக்கும் பழக்கம் நம் பலரிடத்திலும் உள்ளது. இவ்வாறு அவற்றை அடக்கக் கூடாது. இயற்கை வேகங்களாக வாயு, மலம், சிறுநீர், தும்மல், தண்ணீர், தாகம், தூக்கம், இருமல், சிரித்தால் ஏற்படும் மூச்சிரைப்பு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி, விந்து, பசி, ஏப்பம் போன்றவை உள்ளன. இயற்கை வேகங்களை அடக்கினால் இதயம் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு உடல் வேகத்தை அடக்கும்போதும் ஒவ்வொரு உடல் பிரச்னை அறிகுறிகள் ஏற்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
சமூக மதிப்போடு வாழ கடைபிடிக்க வேண்டிய 12 நெறிமுறைகள்!
nature's call

வாயுவை அடக்குவதால் வயிற்றுப் பொருமல், வாயு தொந்தரவு, வயிற்று வலி, சிறுநீர், மலம் வெளியேறுவதில் சிக்கல், அஜீரணம், இதய நோய் போன்றவை ஏற்படுகின்றன. மலத்தை அடக்குவதால் தலைவலி, சைனஸ், கணுக்கால், கெண்டைக்கால் சதையில் வலி, ஆசன வாயில் பிளப்பது போன்ற வலி, மூலம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சிறுநீரை அடக்குவதால் சிறுநீரகக் கல் உருவாதல், சிறுநீரகம், அடிவயிறு, பிறப்புறுப்பில் வலி, சிறுநீர் கழிக்கையில் சிரமம் போன்றவை ஏற்படுகின்றன.

ஏப்பத்தை அடக்குவதால் சாப்பிடும் உணவில் ருசியின்மை, உடலில் நடுக்கம், இதயத்தை அடைப்பது போன்ற உணர்வு, இருமல், விக்கல் போன்றவை ஏற்படுகின்றன.

தும்மலை அடக்குவதால் தலைவலி, முக வாதம், கண், காது, மூக்கு, வாய் போன்றவற்றில் பாதிப்பு உண்டாகிறது.

தண்ணீர் தாகத்தை அடக்கும்போது உடல் வலி, பசியின்மை, ருசியின்மை, உடல் இளைப்பு, வயிற்று வலி, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படுகின்றன.

பசியை அடக்குவதால் உடல் வலி, வயிற்று வலி, தலைச்சுற்றல், கண் இருட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
பணியிடத்தில் உங்களை நிரூபிக்காமல் பிறர் மதிப்பை சம்பாதிக்க சாணக்கிய நீதி சொல்லும் 6 வழிகள்!
nature's call

தூக்கத்தை அடக்குவதால் தலை மற்றும் கண்களில் பாரம், தொடர் கொட்டாவி, உடல் வலி போன்றவை ஏற்படுகின்றன.

இருமலை அடக்குவதால் இருமலின் தாக்கம் அதிகமாகும். மேலும், மூச்சிரைப்பு, ருசியின்மை, இதய நோய், உடல் இளைப்பு போன்றவை உண்டாகின்றன.

கொட்டாவியை அடக்குவதால் தலைவலி, கழுத்துப் பிடிப்பு போன்றவை ஏற்படுகின்றன.

கண்ணீரை அடக்குவதால் சைனஸ் பிரச்னை, தலை, கண், இதயம், கழுத்து போன்ற இடங்களில் வலி, அஜீரணம், தலைச்சுற்றல், வயிற்று வலி போன்றவை ஏற்படுகின்றன.

வாந்தியை அடக்குவதால் அக்கி, சரும நோய், கண்ணில் உறுத்தல், இருமல், மூச்சிரைப்பு, குமட்டல் போன்றவை ஏற்படுகின்றன.

விந்துவை அடக்குவதால் விதைப்பை வீக்கம், காய்ச்சல், இதயத்தில் வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், பிறப்புறுப்பில் வீக்கம் போன்றவை ஏற்படுகின்றன.

இயற்கை வேகங்களை அடக்குவதால் இதுபோன்ற பல உடல் உபாதைகளால் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதால் அவற்றை அடக்கக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com