காலைப் பொழுதை சந்தோஷமாக மாற்றும் சத்தான 5 வகை உணவுகள்!

oatmeal
oatmealhttps://www.britannica.com

காலை நேர உணவாக நாம் உட்கொள்ளும் உணவுகளே அந்த நாள் முழுவதற்கும் தேவையான சக்தியைக் கொடுக்கவும் நமது மனநிலையைத் தொடர்ந்து சந்தோஷமாக வைத்துக் கொள்ளவும் உதவும். அதற்கு உதவக்கூடிய சத்தான 5 வகை  உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. ஓட்ஸ்: ஓட் மீலில் காம்ப்ளெக்ஸ்  கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளன. இது செரோட்டோனின் அளவை அதிகரிக்கச் செய்து மகிழ்ச்சியான மனநிலை தொடர உதவும். ஓட்ஸுடன், மஞ்சள், சீரகம், மல்லித் தழை, கேரட், பட்டாணி, பெல் பெப்பர் போன்றவற்றில் சிலவற்றை சேர்த்து தயாரிக்க ஊட்டச் சத்துக்களுடன் வைட்டமின் மற்றும் நார்ச் சத்துக்களும் கிடைக்கும்.

2. பனானா பாதாம் ஸ்மூத்தி: இதில் ட்ரெய்ப்ட்டோஃபேன் (Tryptophan) என்ற அமினோ ஆசிட் அதிகம் உள்ளது. இது செரோட்டோனின் என்ற மகிழ்வூட்டும் ஹார்மோனாக மாறக்கூடியது. பனானா, பாதாம் மற்றும் தேன் சேர்த்து ஸ்மூத்தியாக்கி உண்கையில் வைட்டமின் B6 மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்கும்.

3.பெர்ரி பழம் சேர்த்த சியா புட்டிங்: இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இவை மன அழுத்தம் மற்றும் கவலைகளைக் குறைக்க உதவும். செரோட்டோனின் அளவை அதிகரிக்கச் செய்து மனம் மகிழ்ச்சியடையச் செய்யும். இரவில் தேங்காய்ப் பாலில் சியா விதைகளை ஊற வைத்து காலையில் ஃபிரஷ் பெர்ரி பழங்கள் சேர்த்து உண்ணலாம்.

இதையும் படியுங்கள்:
மிகவும் விசித்திரமான 8 வித ஃபோபியாக்கள் பற்றி தெரியுமா?
oatmeal

4. முளை கட்டிய மூங் தால் சாலட்: அதிகளவு புரோட்டீன் மற்றும் B வைட்டமின்கள் நிறைந்தது. இவை நியூரோ ட்ரான்ஸ்மிட்டரின் செயல்களை மேம்படுத்தி நல்ல மன ஆரோக்கியம் பெற உதவும். இந்தப் பயறுடன் தக்காளி, வெள்ளரி, மல்லித் தழை, கேரட், பிளாக் சால்ட் சேர்த்து உண்ண ஊட்டச் சத்துக்கள் அதிகரிக்கும்.

5. தயிர்: புரோபயோட்டிக்ஸ் நிறைந்தது. இவை ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது மூளையின் செயல் திறனை முறைப்படுத்தி மனம் தெளிவு பெற உதவும். தயிருடன் தேன், சிலவகை நட்ஸ் மற்றும் சீட்ஸ் சேர்த்து உண்ண சக்தி அதிகரிப்பதுடன் சமநிலை பெற்ற மனநிலை உருவாகவும் செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com