இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபின் அளவில் பாதிப்பு ஏற்பட்டால் புற்றுநோய் மற்றும் அனிமியா நோய்கள் ஏற்படுகின்றன. உடலின் மற்ற செல்களுக்கு ஆற்றலை அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த இரத்த சிவப்பணுக்கள் ஆண்களுக்கு பொதுவாக 14 முதல் 17.5 வரை வரையிலும் பெண்களுக்கு 12.3 முதல் 15.3 வரை இருக்க வேண்டும். விபத்து மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக இரத்தப்போக்கு காரணமாக ஹீமோகுளோபின் அளவு குறையும்போது கீழ்க்கண்ட இரும்புச்சத்து நிறைந்த 8 பானங்களை பருகினால் உடனடியாக ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பீட்ரூட் சாறு: பீட்ரூட்டில் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட்கள் அதிகம் உள்ளதால் பீட்ரூட் சாறு உடலில் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்குக் காரணமாக அமைந்து விரைவாக ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
2. கீரை ஸ்மூத்தி: ஆப்பிள் அல்லது வாழைப்பழத்துடன் கீரையை சேர்த்து அரைத்து இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைத்து உருவாக்குவதே கீரை ஸ்மூத்தி. கீரையில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள் மற்றும் ஃபோலிக் ஆசிட்கள் உள்ளதால் இது உடலில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.
3. மாதுளை பழச்சாறு: மாதுளை பழத்தில் இரும்பு, கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளதால் இந்த சாறு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து ஒட்டுமொத்த இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.
4. கேரட் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு: கேரட்டில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளதால் இணைந்து சாப்பிடும்போது, உடல் இரும்பு சத்துக்களை அதிகம் உறிஞ்ச உதவி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
5. பேரிட்சை பழ மில்க் ஷேக்: பேரிட்சை பழத்தில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் இதை பாலின் கால்சியச் சத்துக்களுடன் இணைந்து சாப்பிடும்போது,, ஊட்டச்சத்துகள் நிறைந்த பானமாகி, ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.
6. தர்ப்பூசணி பழச்சாறு: தர்ப்பூசணி பழத்தில் அதிகளவில் இரும்பு மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்வதோடு, இதில் உள்ள அதிகத் தண்ணீர் சத்துக்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவும்.
7. ஆப்பிள் மற்றும் பீட்ரூட் சாறு: ஆப்பிள் மற்றும் பீட்ரூட் இரண்டிலும் அதிகளவில் இரும்புச்சத்துக்கள் உள்ளதால், இணைத்து சாப்பிடும்போது, உடலில் சக்தி வாய்ந்த ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இந்த பானம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலுக்கு உதவுகிறது.
8. நெல்லிச்சாறு: நெல்லிச்சாறில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளதால், உடல் இரும்புச்சத்துக்களை அதிகம் உறிஞ்ச உதவி உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
மேற்கூறிய எட்டு பானங்களுமே அதிக அளவில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதால் தினந்தோறும் பருகி நிறைவான பலன்களைப் பெறுவோம்.