நோய் எதிர்ப்பு அமைப்பு என்பது தொற்றுகள், நோய்கள், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஆகியவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் அமைப்பாகும். இது சிறந்த ஒரு பாதுகாப்பு முறையாக செயல்பட்டு, நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நலனையும் பாதுகாக்கிறது. அந்த வகையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதை காட்டும் 5 அறிகுறிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. குளிர்ந்த கைகள்: வலுவிழந்த நோய் எதிர்ப்பு அமைப்பின் முக்கிய அறிகுறியாக கைகள் குளிர்ந்த நிலையில் இருப்பதைக் காணலாம். மோசமான இரத்த ஓட்டம் காரணமாக கைகளில் குளிர்ச்சியை ஏற்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டல அமைப்பு சரியான ஆரோக்கியத்தில் இல்லாததை நமக்கு அறிவுறுத்துவதற்காகவே கைகள் குளிர்ந்த நிலையில் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2. சோர்வு: தொடர்ச்சியான சோர்வு என்பது மோசமான நோய் எதிர்ப்பு அமைப்புக்கான ஒரு முக்கியமான அறிகுறி ஆகும். உடலின் பாதுகாப்பு அமைப்பு சமரசம் செய்யப்படும்பொழுது அதனால் நமக்கு சோர்வு, சோம்பேறித்தனம் மற்றும் எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் போகிறது. ஆகவே, எவ்வளவு தூங்கினாலும் நீங்கள் சோர்வாக உணர்கிறீர்கள் என்றால் தொற்றுகள் அல்லது வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பு தவித்து வருகிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயலாற்ற வேண்டும்.
3. மூட்டு வலி: மூட்டு வலியும் வலுவிழந்த நோய் எதிர்ப்பு அமைப்பின் ஒரு அறிகுறி. நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவில்லாமல் இருந்தால் அதனால் வீக்கம் ஏற்பட்டு மூட்டுகளில் வலி மற்றும் இறுக்கம் ஏற்படுகிறது.
4. சருமத்தில் தடிப்புகள்: சருமத்தில் ஏற்படும் தொடர்ச்சியான தடிப்புகள் மற்றும் எரிச்சல் மோசமான நோய் எதிர்ப்பு அமைப்பின் மற்றொரு அறிகுறி ஆகும். ஒருவருடைய நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவிழக்கும்பொழுது அதனால் வீக்கமும், உணர்திறனும் அதிகரித்து சருமத்தில் தொடர்ச்சியான தடிப்புகளை ஏற்படுத்துகிறது. இது குறைவான நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியமான ஒரு குறிகாட்டி.
5. அடிக்கடி செரிமான பிரச்னைகள்: வாயு தொல்லை, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்னைகளால், அடிக்கடிஅவதிப்பட்டு வந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவிழந்து இருப்பதற்கான ஒரு சிக்னல். நோய் எதிர்ப்பு அமைப்பு மோசமான நிலையில் இருந்தால் குடலில் உள்ள நுண்ணுயிரிகள் சமநிலை இல்லாமல், அதனால் நோய் எதிர்ப்பு செயல்பாடு சிறப்பாக நடைபெறாமல் போகும். இதன் விளைவாக செரிமான பிரச்னைகள் ஏற்படும். ஆகவே செரிமான பிரச்னைகள் நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாடு குறைந்துள்ளதைக் காட்டும் ஐந்தாவது அறிகுறியாக உள்ளது.
மேற்கூறிய ஐந்து அறிகுறிகள் தென்படுபவர்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்த செய்ய வேண்டிய வழிமுறைகளை உடனடியாகத் தொடங்குவது மிகவும் நல்லது.