அணியும் உடையும் மனதில் உள்ள ஆளுமையும் நன்றாக இருந்தும் உங்கள் சுவாசம் துர்நாற்றம் வீசினால் உங்களுடைய உழைப்பு அனைத்தும் கெட்டுவிடும். வயிறு தொடர்பான அல்லது உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக வாய் துர்நாற்றத்தால் நம்மிடம் யாரும் பேசவோ, உட்காரவோ விரும்ப மாட்டார்கள் என்ற சூழ்நிலையில் வாய் துர்நாற்றத்தை சரி செய்யும் 5 சூப்பரான எளிய வீட்டு வைத்தியங்களைப் பார்ப்போம்.
1. ஏலக்காய் மற்றும் பெருஞ்சீரகம்: மோசமான செரிமான அமைப்பால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தைப் போக்க உணவுக்குப் பிறகு இரண்டு முறை அரை டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிட, வாய் துர்நாற்றம் நீங்கும். மேலும், வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிட்ட பிறகு ஏலக்காய் சாப்பிடுவதால் இந்தப் பொருட்களின் வாசனையை நிறுத்த உதவுவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது.
2. கடுகு எண்ணெய் மற்றும் உப்பு: ஒரு நாளைக்கு ஒரு முறை கடுகு எண்ணெயில் ஒரு சிட்டிகை உப்பைக் கலந்து ஈறுகளில் மசாஜ் செய்வதன் மூலம், ஈறுகள் ஆரோக்கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தின் அபாயமும் குறைகிறது. முற்காலத்தில் நம் பெரியவர்கள் கடுகு எண்ணெய் மற்றும் உப்பு இரண்டையும் கலந்து பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தி வாய் துர்நாற்றத்தைப் போக்கியிருக்கிறார்கள்.
3. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சையின் மந்திரம்: எலுமிச்சை உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கொன்று வாயை சுத்தம் செய்கிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு எலுமிச்சையை பிழிந்து தினமும் காலையில் வாயை கழுவுவது மற்றும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்துக் குடிப்பது ஆகியவை வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
4. கிராம்பு: பல்வலி ஏற்படும்போது பற்களில் கிராம்புகளை அழுத்திக்கொள்ள கிராம்பில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் பல் வலிக்கு நல்ல அருமருந்தாக இருப்பதோடு, கிராம்புகளை வாயில் உறிஞ்சுவதால் துர்நாற்றத்தையும் குறைக்கிறது.
5. பச்சை தேயிலை: கிரீன் டீயில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் வாய் துர்நாற்றத்தை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. மேலும், கிரீன் டீ வாய் வழி நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
வாய் துர்நாற்றத்திற்கு மேற்கூறிய ஐந்து முறைகளும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய அருமையான எளிதான வீட்டு வைத்திய குறிப்புகள் ஆகும்.