எந்தெந்த பழங்களின் தோலை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தெரியுமா?

Fruits peels
Fruits peels
Published on

பழங்களை விட சில பழங்களின் தோல் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அந்தவகையில் எந்தெந்த பழங்களின் தோல் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.

பலர் எந்த பழம் எடுத்துக்கொண்டாலும் தோலைத் தூக்கிப்போட்டு பழத்தை மட்டும் சாப்பிடுவார்கள். ஆனால், தோலில் நமக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ஒவ்வொரு பழத்திற்கும் ஏற்ப பழத்தோல்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாறும். உரிக்கப்பட்ட பழங்கள் உண்பதை விட உரிக்கப்படாத பழங்களில்தான் நமக்கு அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

உதாரணத்திற்கு தோலுடன் இருக்கும் ஆப்பிளில் 332% வைட்டமின் கே, 142% வைட்டமின் ஏ, 115% வைட்டமின் சி ,20% கால்சியம் மற்றும் 19% பொட்டாசியம் உள்ளது. இது உரிக்கப்படும் ஆப்பிளைவிட அதிகம். ஜூஸைவிடவும் அதிக சத்துக்கள் உரிக்கப்படாத ஆப்பிளில் இருக்கிறது.

மேலும் அப்படியே தோலுடன் சாப்பிடுவதால், செரிமான ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை வலிமை ஆகிறது.

அந்தவகையில் எந்தெந்த பழங்களை தோலுடன் சாப்பிடலாம் என்று பார்ப்போம்.

வாழைப்பழம்:

வாழைப்பழ தோல்களில் வைட்டமின் ஏ மற்றும் லுடின், வைட்டமின் பி6 மற்றும் பி12 உள்ளது. மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ட்ரிப்டோபன் போன்றவையும் உள்ளன. இது சர்மத்திற்கும் கண்களுக்கும் மிகவும் நல்லது. ஆகையால், வாழைப்பழ தோலை ஸ்மூத்தியுடன் அரைத்துக் குடிக்கலாம். அல்லது கொதிக்க வைத்து வடிகட்டி நீராக குடிக்கலாம்.

ஆரஞ்சு:

இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, ரைபோஃப்ளேவின், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உள்ளன. தோலில் ஃப்ளவனாய்டுகள் அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளன. மேலும் ஆரஞ்சு தோல் உடல் கொழுப்பை குறைக்கும். இதன் தோலை நறுக்கி சாலட்டில் சேர்க்கலாம். அதேபோல் ஐஸ்க்ரீம் போன்றவற்றிற்கு ருசிக்கும் வாசனைக்கும் சேர்க்கலாம்.

ஆப்பிள்:

ஆப்பிளில் புற்றுநோயை எதிர்க்கும் பைட்டோ கெமிக்கல்கள் 87 சதவிகிதம் அதிகம் உள்ளன. ஜூஸ் செய்யும்போதும்கூட தோலோடு செய்வது நல்லது.

மாம்பழம்:

ஒரு ஆய்வில் மாம்பழத்தில் உள்ள சில இரசாயனங்கள் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய்களை தடுக்க உதவும். இதில் பாலிபினால்கள், கரோட்டினாய்டுகள், பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஆகியவை அதிக அளவில் உள்ளன. மேலும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. ஆனால் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழத்தின் தோலை சாப்பிடக்கூடாது.

இதையும் படியுங்கள்:
நரம்புத்தளர்ச்சி எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
Fruits peels

தர்பூசணி:

இதிலுள்ள சிட்ருலினா மற்றும் அமினோ ஆகியவை இரத்த நாளங்களை நீர்த்துபோக செய்வதற்கு உதவும் மூலக்கூறுகள். மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கலாம். அல்லது ஊறுகாய்போல் எடுத்துக்கொள்ளலாம்.

அனைத்து பழத்தின் தோல்களுமே உடலுக்கு நல்லதுதான். ஆனால், ஒருமுறை ஆலோசித்து எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். மேலும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டவை மற்றும் ரசாயனம் சேர்க்கப்பட்ட பழங்களைத் தவிர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com