மனதில் மகிழ்ச்சி உள்ளிருந்து பீறிட 5 எளிய ஆலோசனைகள்!

மனதில் மகிழ்ச்சி உள்ளிருந்து பீறிட 5 எளிய ஆலோசனைகள்!
Published on

ஸ்மைல், பி ஹாப்பி ஆல்வேஸ், பி பாசிடிவ் போன்ற வார்த்தைகள் நவீன கால ட்ரெண்டிங்காக, முதியோர் மற்றும் இளம் வயதினர் என்ற பாகுபாடின்றி அனைவராலும் உச்சரிக்கப்பட்டு வரும் சொற்கள் ஆகும். வெறும் வார்த்தை உச்சரிப்பால் மட்டும் மனதில் சந்தோஷமோ, நேர்மறை எண்ணங்களோ உடனடியாக நம்முடன் வந்து ஒட்டிக்கொள்ளாது. ஒவ்வொரு தனி நபரின் உணர்ச்சிபூர்வமான உள் மனதின் உந்துதலில் உருவாகி வருவதே மகிழ்ச்சியும் சந்தோஷமும். சந்தோஷத்தைப் பெற நாம் பின்பற்ற வேண்டிய ஐந்து வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. நாம் தினசரி உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின்  என்ற ஹார்மோன் உற்பதியாகி வெளிவரும். இந்த ஹார்மோனுக்கு நம் மனநிலையை மகிழ்ச்சியாக்கி சந்தோஷத்தை வெளிக்கொணரும் வலிமை உண்டு. வீட்டைச் சுற்றி ஒரு வேகமான நடை நடந்து விட்டு வந்தாலே மகிழ்ச்சியின் ஊற்று மனதுக்குள் பிரவாகமெடுக்கும்.

2. நமது நெருங்கிய நண்பர்களையோ உறவினர்களையோ சந்தித்துப் பேசிவிட்டு வருவதும் மன நிலையில் மகிழ்ச்சியை உண்டுபண்ணும். அவர்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருப்பது நம் உணர்ச்சிகளை இன்னும் பாதுகாக்கவும் சந்தோஷமாக  வைத்திருக்க உதவும்.

3. தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்வது அல்லது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்வது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. அது ஸ்ட்ரெஸ் மற்றும் மனக்கவலைகளைக் குறைக்க உதவும். திருப்தியான உணர்வு தருவதுடன் மனதை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
6 வகை தலைவலிகளும் அவற்றின் காரணங்களும்!
மனதில் மகிழ்ச்சி உள்ளிருந்து பீறிட 5 எளிய ஆலோசனைகள்!

4. நம் தினசரி வாழ்வில் நடைபெறும் நல்ல விஷயங்களை, அது அளவில் சிறியதாயினும், பெரியதாக இருந்தாலும் அதற்காக சிறிது நேரம் செலவிட்டு அதை நினைத்துப் பார்ப்பது நல்லது. அவற்றை டைரியில் எழுதி வருவது எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் மீது நம் கவனத்தை திருப்ப உதவும்.

5. வீட்டிற்கு வெளியே வந்து இயற்கை சூழலில் சிறிது நேரத்தைக் கழிப்பது, நல்ல காற்றை சுவாசிக்கவும் சூரிய ஒளி உடம்பில் படவும் வாய்ப்பளிக்கும். மேலும்,  சிந்தனைகள் புத்துணர்ச்சி பெறவும் மகிழ்ச்சியான மனநிலை உண்டாகவும் உதவும்.

இந்த 5 எளிய ஆலோசனைப் பின்பற்றி வாழ்க்கையை சந்தோஷம் நிறைந்ததாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com