உடலின் சர்க்கரை அளவைக் குறைக்க 5 எளிய ஆலோசனைகள்!

சர்க்கரை அளவு மிகுந்த உணவுகள்
சர்க்கரை அளவு மிகுந்த உணவுகள்https://directorsblog.nih.gov
Published on

ரோக்கியமான உணவு முறைக்கும், உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற உடல் கோளாறுகளைத் தவிர்க்க நம் உணவுடன் சேர்க்கும் சர்க்கரையின் அளவைக் குறைப்பது மிகவும் அத்தியாவசியம் ஆகும். நம்மில் பலர் அவர்களை அறியாமலேயே பல வகையான பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில்  ஒளிந்திருக்கும் சர்க்கரையை உடலுக்குள் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நூறு சதவிகிதம் உண்மை. சர்க்கரை அளவு உடலுக்குள் அதிகரிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டிய 5 எளிய வழிமுறைகள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. எப்பொழுதும் உணவு நிரப்பப்பட்டிருக்கும் பாக்கெட் மீது ஒட்டப்பட்டிருக்கும் சத்துக்கள் விகிதம் பற்றிய குறிப்புகளை செக் பண்ண வேண்டியது அவசியம். அதில் சர்க்கரையின் அளவு, ஃப்ரக்டோஸ், க்ளுகோஸ் அல்லது சக்ரோஸ் என பலவித மாற்றுப் பெயர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றை கவனத்துடன் படித்தறிந்து 'நோ சுகர்' அல்லது 'குறைந்த அளவு சுகர்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்களை தேர்ந்தெடுத்து உண்பது நலம்.

2. சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுள்ள சோடா, எனர்ஜி பானம் மற்றும் ஜூஸ்கள் குடிப்பதற்குப் பதில் தண்ணீர், மூலிகை டீ, ஸ்பார்க்ளிங் வாட்டர் போன்றவற்றை அருந்துதல் ஆரோக்கியம் தரும்.

3. முழுமையான ஃபிரஷ் பழங்கள் இயற்கையான இனிப்புச் சத்தும் நார்ச் சத்தும் அடங்கியவை. இவற்றை சாப்பிடும்போது இவை இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்க உதவி புரியும். 'நூறு சதவிகிதம் பழச்சாறு' என லேபிள் ஒட்டப்பட்டிருக்கும் ஜூஸ்கள் கூட ஆரோக்கியம் அற்றவை என்றே கருதலாம். ஏனெனில் அவற்றில் நார்ச்சத்து கிடையாது.

இதையும் படியுங்கள்:
சாதாரண மண் பானை சத்தான மண் பானையாக மாற என்ன செய்வது?
சர்க்கரை அளவு மிகுந்த உணவுகள்

4. குக்கீஸ், கேண்டீஸ் போன்ற சர்க்கரை அதிகம் சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்நாக்ஸ்களைத் தவிர்த்து ஆரோக்கியம் நிறைந்த நட்ஸ், சீட்ஸ், இனிப்பு சேர்க்காத யோகர்ட் போன்றவற்றை உண்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

5. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அல்லது ரெஸ்ட்டாரன்ட்களில் தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதைத் தவிர்த்து, வீட்டில் சமைக்கும் உணவுகளுக்கு முன்னுரிமை தருவது ஆரோக்கியத்துக்கு உத்திரவாதம் அளிக்கும். ஏனெனில், நம் கையால் சமைக்கும்போது சேர்மானப் பொருட்களின் அளவைத் தீர்மானிப்பது நம் கைகளே! உப்போ சர்க்கரையோ நம் தேவைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ போட்டுக்கொள்ளலாம்.

மேலே கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி உடலில் சர்க்கரை அளவு ஏறாமல் பாதுகாப்போம்; நோய்களைத் தவிர்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com