கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள 5 சிறப்பு பலன்கள்!

chickpeas
chickpeas

கொண்டைக்கடலையில் கருப்பு, வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன ‌அதில் நாம் பெரும்பாலும் கருப்பு கொண்டைக்கடலையைத் தான் உபயோகிக்கிறோம். இதில் கொழுப்பு குறைவு‌. நார்ச்சத்து, வைட்டமின்களும் மற்றும் கனிம சத்துக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனை ரெகுலராக எடுத்துக் கொள்ள பல நன்மைகள் கிடைக்கும்.

பலன்கள்:

எடையைக் குறைக்கும்:

கருப்பு நிறக் கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால், உடல் எடை குறைய உதவி புரிகிறது. இதனை அரைகப் எடுத்துக் கொண்டாலும் வயிறு நிறைவதோடு நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது.

இதயநோயை தடுக்கும்:

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், டெல்டின், ஃபைடோ நியூட்ரியன்ட் போன்றவை இருப்பதால் ரத்த நாளங்களில் கொழுப்புகள் தங்கி அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மாரடைப்பு பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

கொலஸ்ட்ராலை குறைக்கும்:

கருப்பு நிற கொண்டைக் கடலையில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் அவை கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இதில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இதனால், அதிலுள்ள கார்போஹைடிரேட் உடைந்து மெதுவாக சொரிமானமாகும். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
கிராம்பில் சில அல்ல பல நன்மைகள் உள்ளன! உங்களுக்கு இது தெரியுமா?
chickpeas

செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும்:

தினமும் இரவு ஊற வைத்து மறுநாள் வேக வைத்து சாப்பிட செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் கருப்பு நிற கொண்டைக்கடலை ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கும். ரத்த சோகை வரும் வாய்ப்பை தடுத்து உடலுக்கு தேவையான சக்தியை அதிகரிக்கும்.

மலச்சிக்கலை நீக்கும்:

இரவில் ஊற வைத்த கடலையை பச்சையாக சாப்பிட்டாலும் அல்லது கடலை ஊறிய ‌நீரை குடித்தாலும் மலச்சிக்கல் நீங்கும். இளம் பருவத்தினருக்கான சத்துக்கள் அனைத்தையும் தந்து உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எலும்புகள், மூட்டுகளை வலுவாக்கி சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

இவ்வாறு பல விதங்களில் பயன்படும் கருப்பு கொண்டைக்கடலையை உணவில் சேர்த்து ஆரோக்கியம் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com