meta property="og:ttl" content="2419200" />
அசைவ உணவில் சேர்க்கப்படும் முக்கியமான ஒரு நறுமணப் பொருள் கிராம்பு. இது சுவை, மணம் என்பதை தாண்டி பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
இலவங்கத்தை கருவாய்க் கிராம்பு, அஞ்சுகம், லவங்கபூ, திரளி என பல பெயர்களில் அழைக்கின்றனர். கிராம்பு காரமும், விறுவிறுப்பும் கொண்டது. கிராம்பு மொட்டில் இருக்கும் Eugenin என்ற வேதியியல் மூலக்கூறுகள் தான் இதன் சிறப்பிற்கு காரணம்.
கிராம்பு பலவிதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
உதாரணமாக இது மயக்கத்தை போக்கவல்லது.
ஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும்.
பேதியைக் கட்டுப்படுத்தும். நாட்பட்ட பேதியைப் போக்கும்.
ஆசனவாய் கடுப்பை போக்கும்.
கர்ப்பிணிகளின் வாந்தியை மட்டுப்படுத்தும்.
சிவந்த மச்சம், தோல் நோயான படைகள், போன்றவற்றை நீக்கும்.
கண்ணில் பூ விழுதலை தடுக்கும்.
காது நோய்களை குணப்படுத்தும்.
கிராம்பு உடலுக்கு சூடு அளிக்கக்கூடியது.
ரத்தம் உறைதலை தடுக்கும் Eugenol, Acetyl என்ற பொருள்கள் உள்ளன. Ethanolic உள்ளதால் கிராம்பு ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது.
நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும்.
காய்ச்சல் களைப்பை போக்கும்.
கிராம்பு வாய் துர்நாற்றத்தை போக்கி நாக்கில் சுவையைக் கூட்டும்.
கல்லீரல் வலிகளைப் போக்கி கல்லீரலை பாதுகாக்கும்.
உடலில் உள்ள பித்தத்தைப் போக்கி பசியைத் தூண்டும்.செரிமானத்தை மேம்படுத்தும்.
பல்வலி, ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்தும் நிவாரணம் தருகிறது.
கிராம்பு தைலம் அற்புதமான கொசு விரட்டி.
கிராம்பு உணவு பதப்படுத்தலிலும் பயன்படுகிறது.
மேலும் இதன் பயன்கள்:
தொண்டைப் புண் குணமாக வெறும் வாணலியில் லவங்கத்தை வதக்கி வாயில் போட்டு சுவைத்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண் குணமாகும்.
பலமான ஈறுகளுக்கு லவங்கத்தை தோலில் வதக்கி சுவைக்க ஈறுகள் பலப்படும்.
குமட்டல் மற்றும் வாந்தி நிற்க வெந்நீருடன் 10 கிராம் கிராம்புத்தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊற விட்டு பின் வடிகட்டி அருந்த குமட்டல் மற்றும் வாந்தி நிற்கும். அதோடு நன்கு பசி எடுக்க வைக்கும்.
கிராம்பை தண்ணீர் விட்டு அரைத்து அந்த விழுதை வலி உள்ள இடத்தில் பத்தாக போட, வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும்.
4, 5 கிராம்பை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் நாவறட்சி தீரும். குமட்டல், மயக்கம் , தலைசுற்றல் சரியாகும்.
தலைபாரம் மற்றும் தலைவலிக்கு கிராம்பு தைலம் தடவ சரியாகும்.
சரியான முறையில் கிராம்பை உட்கொள்ள நல்ல பலன்களை தரும்.