சர்க்கரை நோயாளிகள் தீபாவளிக்கு அளவோடு சாப்பிடக்கூடிய 5 இனிப்புகள்!

Diwali Sweets for Diabetics
Diwali Sweets for Diabetics
Published on
Deepavali Strip 2024
Deepavali Strip 2024

தீபாவளி என்றாலே இனிக்கும் என்று சொல்லலாம். ஆனால், அது சர்க்கரை நோயாளிகளுக்கு கசக்கும். ஏன் தெரியுமா? ‘ஒரு ஸ்வீட் கூட சாப்பிட முடியவில்லை’ என்ற வருத்தம்தான். கவலைப்படாதீர்கள். தீபாவளிக்கு சர்க்கரை நோயாளிகள் இந்த ஐந்து இனிப்புகளை அளவோடு சாப்பிட்டால் எந்த பாதிப்பும் இருக்காது. குறிப்பாக, இந்த இனிப்பு வகைகளை வீட்டில் செய்து சாப்பிட்டால் இன்னும் ஒன்று சேர்த்து கூட சாப்பிட்டு மகிழலாம்.

1. பாதம் பர்பி: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இனிப்பு வகைகளில் ஒன்று பாதம் பர்பி. இந்த ஸ்வீட்டை கடையில் வாங்குவதற்கு பதில் வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது. சிறிது பாதம் எடுத்து வறுத்துக்கொள்ள வேண்டும், அதனுடன் தேன் சேர்த்து ஒரு அச்சில் வைத்து பரிமாறினாள் சுவையான பாதம் பர்பி ரெடி.

2. கேரட் ஹல்வா: ஹல்வா யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் கேரட் ஹல்வாவின் சுவையே அலாதி. கேரட்டில் இயற்கையாகவே இனிப்பு சுவை உள்ளதால் அதில் சிறிதளவு வெல்லம், கருப்பட்டி அல்லது தேன் சேர்த்தாலே போதுமானது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இனிப்பாகும் இது.

3. பேரிச்சம்பழம் லட்டு: தீபாவளி பண்டிகையில் லட்டு சாப்பிட விரும்புபவர்கள் பேரிச்சம்பழம் லட்டு செய்து சாப்பிட்டு மகிழலாம். பேரிச்சம்பழத்தில் உள்ள இயற்கையான இனிப்பு சுவையே போதுமானது. அதனை நட்ஸ் வகைகளுடன் சேர்த்து லட்டுவாக செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமும், சுவையும் அள்ளும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளியில் நல்லெண்ணெய் குளியல் செய்வதன் மகத்துவம் தெரியுமா?
Diwali Sweets for Diabetics

4. இனிப்பு சேமியா: சேமியாவை வைத்து செய்யப்படும் ஸ்வீட் வகையே இனிப்பு சேமியா. சேமியாவை பாலுடன் சேர்த்து முந்திரி, பாதம், தேன் அல்லது வெல்லம் ஆகியவற்றுடன் கலந்து இனிப்பு சேமியா செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஸ்வீட் வகையாகும் இது.

5. தேங்காய் வெல்லம் பர்பி: கடலை மாவு, தேங்காய், வெல்லம், நெய் ஆகியவற்றை சேர்த்து தேங்காய் வெல்லம் பர்பி செய்யலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இந்த ஸ்வீட்டை வீட்டில் செய்து பார்த்து தீபாவளியை ஜாலியாக இனிப்பு சாப்பிட்டுக் கொண்டாடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com