தீபாவளியில் நல்லெண்ணெய் குளியல் செய்வதன் மகத்துவம் தெரியுமா?

Diwali Oil Bath
Diwali Oil Bath
Published on
Deepavali Strip 2024
Deepavali Strip 2024

தீபாவளியன்று அதிகாலையிலேயே எழுந்து தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிப்பது என்பது பாரம்பரியமாக கடைப்பிடித்து வரக்கூடிய பழக்கமாகும். அதற்கான காரணம் என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

தீபாவளி பண்டிகையன்று அதிகாலையில் நல்லெண்ணெய் குளியல் எடுப்பது தொடர்ந்து பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும். வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்ற நபர்களை அமர வைத்து தலையிலே மூன்று சொட்டு நல்லெண்ணெய் விட்டு உடல் முழுவதும் தேய்த்து எண்ணெய் குளியல் செய்யச் சொல்வது வழக்கமாகும்.

நல்லெண்ணெய்யை உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதால், உடலில் உள்ள சூடு குறைகிறது. வெளியிலுள்ள தட்ப வெட்ப நிலைக்கு ஏற்றவாறு நம் உடலில் உள்ள வெப்ப நிலையை சமநிலைப்படுத்திக் கொள்ள முடியாததால் உடலில் பிரச்னைகள் ஏற்படுகிறது. நல்லெண்ணெய் குளியல் எடுக்கும்பொழுது உடலின் வெப்பத்தை சமன் செய்கிறது. இதனால், நோய்கள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

பருவநிலை மாற்றம் ஏற்படுவதால், சருமத்தில் வறட்சி ஏற்படும். இதனால் சருமத்தில் தடிப்புகள் போன்ற பிரச்னைகள் ஏற்படும். நல்லெண்ணெய்யால் உடல் முழுவதும் மசாஜ் செய்வதால், வறட்சி குறைகிறது. மேலும், சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைக்க உதவுகிறது.

வெயில் காலத்திலும், பருவநிலை மாற்றம் ஏற்படும் பொழுதும் பெரும்பாலும் முடிக்கொட்டுதல், பொடுகுப் பிரச்னை ஏற்படும். தலைக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தும்போது பொடுகுத் தொல்லை, வறட்சியை சரிசெய்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இளநரையை போக்கி முடியை கருமையாக வைக்க உதவுகிறது.

நல்லெண்ணெய்யில் உடல் முழுக்க மசாஜ் செய்து குளிக்கும் பொழுது ஸ்ட்ரெஸ் குறைந்து உடல் ரிலாக்ஸாக ஆகிறது. வெதுவெதுப்பான நல்லெண்ணெய்யை இரண்டு விரல்களில் தொட்டுக் கொண்டு கண்களை மூடி மேலே நன்றாக மசாஜ் செய்வதால் கண்களில் ஏற்படும் சோர்வு நீங்கும்.

இதையும் படியுங்கள்:
Coconut oil Vs Almond oil: முடி வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெய் எது?
Diwali Oil Bath

மேலும், தலைவலி இருந்தால் நல்லெண்ணெய்யை வைத்து உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்வதால், டென்ஷன் குறைந்து ரிலாக்ஸ் ஆக இருக்க உதவுகிறது.

உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்காகவே நல்லெண்ணெய் குளியல் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. நல்லெண்ணெய் குளியல் செய்யும்போது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி குளிக்கும்பொழுது வெளிக்கொண்டு வர உதவுகிறது.

நல்லெண்ணெய் குளியல் செய்யும்போது உடல் முழுவதும் எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்வதால், தசை மற்றும் மூட்டுப் பகுதியில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்திலும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com