வயிற்றுத் தொப்பையை விரட்டும் 5 காய்கறிச் சாறுகள்!

Juice
Juice
Published on

இன்றைய இளைஞர்கள் மத்தியில் தொப்பையை குறைப்பது என்பது ஒரு பெரிய சவாலாகவே மாறிவிட்டது. துரித உணவு கலாச்சாரம், உடற்பயிற்சி செய்ய போதிய நேரம் இல்லாமை போன்ற காரணங்களால் தொப்பை வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. குறிப்பாக, பெருநகரங்களில் வேலை செய்பவர்கள் நாள் முழுவதும் நாற்காலியிலேயே அமர்ந்து வேலை பார்ப்பதும், நீண்ட நேரம் பயணங்கள் மேற்கொள்வதும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. 

ஆனால், கவலை வேண்டாம், இயற்கையான முறையில் தொப்பையை குறைப்பதற்கு சில எளிய வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று பச்சை காய்கறி சாறுகள். ஆம், சில காய்கறிகளை சாறாக அருந்துவதன் மூலம் தொப்பையை கட்டுக்குள் கொண்டு வரலாம். அப்படிப்பட்ட ஐந்து காய்கறி சாறுகளை பற்றி இப்போது பார்ப்போம்.

முதலாவதாக ஆப்பிள், கிவி மற்றும் பாலக்கீரை சாறு. இந்த கலவை நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்தது. ஆப்பிளில் உள்ள பெக்டின் நார்ச்சத்து வயிற்றை சுற்றி இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. கிவி பழம் கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை ஊக்குவிக்கிறது. பாலக்கீரையில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம். இவை அனைத்தும் சேர்ந்து உடல் எடையை குறைக்கவும், தொப்பையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

அடுத்து வெள்ளரிக்காய் மற்றும் இஞ்சி சாறு. வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. இஞ்சி உடலின் வெப்பநிலையை அதிகரித்து மெட்டபாலிசத்தை துரிதப்படுத்துகிறது. இந்த சாறு உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது உடலை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றவும் சிறந்தது.

ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காய் சாறு இருப்பதுடன், கொழுப்பை எரிக்கும் திறனையும் அதிகரிக்கிறது. நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த சாறு பசியை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடல் வீக்கத்தை குறைக்கிறது. உடற்பயிற்சி செய்த பின் இந்த சாறை அருந்துவது மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

சுரைக்காய் சாறு ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த பானம். இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம். கலோரிகள் மிகவும் குறைவு. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் சுரைக்காய் சாறு குடிப்பதால் வயிற்று கொழுப்பு குறையும்.

பாலக்கீரை, வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு கலவை வயிற்று கொழுப்பை குறைக்க ஒரு சிறந்த ஜூஸ். பாலக்கீரை நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது, வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. எலுமிச்சை சாறு வைட்டமின் C சத்து அளிக்கிறது மற்றும் கொழுப்பு எரிக்கும் திறனை அதிகரிக்கிறது. இந்த சாறு உடலை சுத்தப்படுத்தவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் விரும்புவோருக்கு ஏற்றது.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் உடலுக்கு நீர்ச் சத்து குறையாமல் பாதுகாக்கும் 9 காய்கறி/பழங்கள்!
Juice

இந்த ஐந்து காய்கறி சாறுகளும் தொப்பையைக் குறைக்க உதவும் இயற்கை பானங்கள். இவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்து தொப்பையில் இருந்து விடுபடலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com