'இது என்ன மாயம்' என வியக்க வைக்கும் முடி வளர்ச்சிக்கு உதவும் 5 வகைக் காய்கறிகள்!

முடி வளர்ச்சிக்கு உதவும் காய்கறிகள்
முடி வளர்ச்சிக்கு உதவும் காய்கறிகள்https://www.stylecraze.com
Published on

'இது என்ன மாயாஜாலம்' என பார்ப்பவர்கள் அனைவரையும் வாய் பிளக்கச் செய்யும் அளவுக்கு முடியை அடர்த்தியாகவும் விரைவாகவும் வளரச் செய்ய உதவும் 5 காய்கறிகள் உள்ளன. அவை என்னென்ன காய்கள், அவற்றில் முடி வளர உதவக்கூடிய ஊட்டச் சத்துக்கள் என்னென்ன அடங்கி உள்ளன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

* பீட்டா கரோட்டீன் என்ற சத்து ஸ்வீட் பொட்டட்டோவில் அதிகம் நிரம்பி உள்ளது. இது உடலுக்குள் சென்று வைட்டமின் A யாக மாறக் கூடியது. அதோடு, முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய சீபம் (Sebum) என்ற பொருளின் உற்பத்திக்கு வைட்டமின் A பெரிதளவில் உதவி புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

* பீட்ரூட்டில் நைட்ரேட்ஸ், வைட்டமின் C, B6 போன்ற ஊட்டச் சத்துக்கள் மிகுதியாக உள்ளன. இவை தலைப் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கச் செய்து முடி கால்களைச் சுற்றி அமைந்திருக்கும் நுண்ணறைகளின்  ஆரோக்கியம் மேம்பட பெரிதும் உதவி புரிகின்றன.

* கேரட்டில் வைட்டமின் A சத்து அதிகம் உள்ளது. இது முடி உடைவதைத் தடுத்து, அதன் வலுவான வளர்ச்சிக்கு உதவி புரியும். மேலும், தலையில் முடி வளரும் சருமப் பகுதியை (Scalp) ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் இமேஜை உயர்த்தும் பக்குவப்பட்ட பேச்சு!
முடி வளர்ச்சிக்கு உதவும் காய்கறிகள்

* பசலைக் கீரையில் இரும்புச் சத்து, ஃபொலேட், வைட்டமின் A, C ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை தலையின் சருமப் பகுதியை ஆரோக்கியமாக வைப்பதுடன் வலுவான முடி வளர்ச்சிக்கும் துணை புரிகின்றன.

* பெல் பெப்பர்களில் அதிகளவு வைட்டமின் C சத்து உள்ளது. இது கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க உதவும். மேலும் முடிக்கால்களை வலுவாக்கி அவை உடைவதைத் தடுக்கவும் செய்யும்.

இந்த 5 வகைக் காய்கறிகளை அடிக்கடி உட்கொண்டு உடல் வலுவும் ஆரோக்கியமும் நிறைந்த முடியுடன் வலம் வருவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com