உங்கள் இமேஜை உயர்த்தும் பக்குவப்பட்ட பேச்சு!

Value-enhancing speech
Value-enhancing speech
Published on

நாம் சிலரிடம் சில சமயங்களில் ஏதோ ஒன்று சொல்லப் போய் அது வேறு விதமாக முடிந்துவிடும். இப்படிப் பல நேரங்களில் பிரச்னை ஏற்படுவதற்கான காரணம் நம் பேச்சுதான். இதனால் சில உறவுகளில் கூட முறிவுகள் ஏற்பட்டிருக்கலாம். அதற்குக் காரணம் ஒருவரிடம் எப்படிப் பேசுவது என்று தெரியாமல் இருப்பதுதான். மற்றவர்களிடம் எப்படிப் பக்குவமாகப் பேசுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.

1. சிந்தித்துப் பேசுங்கள்: யாரேனும் ஒரு நபரைச் சந்தித்தவுடன் வள வளவென்று பேசாமலும், அவர்களிடம் தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்ளாமல் அவர்களிடம் நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்பதை மனதுக்குள் ஒரு முறை ஒத்திகை செய்து நிதானமாகப் பேசுங்கள். இல்லையென்றால் உங்களைப் பற்றிய பிம்பம் அவர்களிடம் மோசமாக இருக்கும்.

2. தெளிவாகப் பேசுங்கள்: நீங்கள் ஒருவரிடம் பேசும் பொழுது பேசும் தலைப்பிற்குப் பொருத்தமில்லாமல் எதை எதையோ சுற்றி வளைத்துப் பேசாமல் நீங்கள் சிந்தித்ததை மட்டும் பேசுங்கள். அப்படி நீங்கள் சிந்தித்ததைப்பற்றிப் பேசும் பொழுது மழுங்கடிக்கக்கூடிய சிந்தனைகளை அறவே ஒதுக்கி விடுங்கள். அது உங்களைப் பக்குவமற்றவராகக் காட்டும்.

3. புறம் பேசாதீர்கள்: எந்த ஒரு பக்குவம் அடைந்த நபரும் ஒருவரை பற்றிக் கூற வேண்டும் என்றால் அவர் முகத்திற்கு நேராகக் கூறுவோம். அவர் சென்ற பின் புறம் பேச மாட்டார்கள். அதனால் நீங்கள் வதந்திகள் பேசுவதையும் அல்லது மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதையும் தவிர்த்து விடுங்கள். இது மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டால் உங்களைப் பற்றிய உயர்வான எண்ணங்கள் சுக்குநூறாக உடைந்து விடும்.

இதையும் படியுங்கள்:
பாத வெடிப்பு பிரச்னைக்கு பேருதவி புரியும் ப்யூமிக் கல்!
Value-enhancing speech

4. அமைதியாகப் பேசுங்கள்: ஏதாவது ஒரு விவாதத்தில் நீங்கள் சத்தமாகப் பேசும் சூழ்நிலை ஏற்பட்டால் நீங்கள் சத்தமாகப் பேச வேண்டாம். அப்படி நீங்கள் சத்தமாகப் பேசினால் உங்களது வளர்ப்பு சரியில்லை என்று மற்றவர்கள் எண்ணிவிடுவார்கள். அதனால் உங்களது உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

மேற்கூறியபடி இந்த நான்கு செயல்முறைகளையும் உங்கள் வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம், மற்றவர்களிடம் நீங்கள் பக்குவமாகப் பேசலாம். இதனால் நீங்கள் முதிர்ந்த (Matured) நபராக மற்றவர் பார்வைக்குத் தெரியலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com