தலை முடி பற்றிய கவலையா? இந்த 5 விட்டமின் E நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்! 

5 Vitamin E Rich Foods.
5 Vitamin E Rich Foods.
Published on

வாழ்க்கையில் எந்த கவலை இருக்கிறதோ இல்லையோ, தலைமுடி பற்றிய கவலை அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. அதற்காக பலவிதமான ப்ராடக்டுகளை தலைக்கு நாம் பயன்படுத்தினாலும், தலைமுடி ஆரோக்கியத்திற்கு விட்டமின் E மிக முக்கியமாகும். எனவே விட்டமின் E நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்வது மூலமாக தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இந்த பதிவில் விட்டமின் E அதிகம் நிறைந்த 5 உணவுகள் என்னவெனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

இன்றைய காலத்தில் எல்லா வயதினருக்கும் முடி சார்ந்த பிரச்சினை என்பது பொதுவானதாக மாறிவிட்டது. அந்த காலத்தில் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை ஆரோக்கியமானதாக இருந்ததால், 40 வயதிற்குப் பிறகு நரைமுடி அல்லது முடி உதிர்வுப் பிரச்சனைகள் காணப்பட்டது. ஆனால் இப்போது சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை எல்லா தரப்பினருக்குமே முடி சார்ந்த பிரச்சினைகள் அதிகமாகிவிட்டன. இதற்கு ஆரோக்கியமான உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளாததே காரணம். குறிப்பாக விட்டமின் E நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடாததால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

1. அவகாடோ: அவகாடோவை தமிழில் வெண்ணைப் பழம் என அழைப்பார்கள். இதில் பொட்டாசியம் விட்டமின் கே, விட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் நமது உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடி உதிர்வைத் தடுக்க உதவும்.

2. விதைகள் மற்றும் விதை எண்ணெய்கள்: சூரியகாந்தி, பூசணி, எள், ஆளி போன்ற விதைகளிலும் அதன் எண்ணெய்களிலும், ஒமேகா 3 பேட்டி அமிலம் நிறைந்துள்ளது. இது கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவித்து, அதன் வளர்ச்சியைத் தூண்ட உதவும். குறிப்பாக இவற்றில் நிறைந்துள்ள விட்டமின் ஈ சத்து, உங்கள் உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைத்து இயற்கை அமைப்பைப் பராமரிக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
அஸ்வின் செய்த செயலுக்கு அலெஸ்டர் குக் விமர்சனம்.. அப்படி என்ன செய்தார்?
5 Vitamin E Rich Foods.

3. கீரைகள்: எல்லா விதமான பச்சை இலைக் கீரைகளிலும் இரும்புச்சத்து மற்றும் விட்டமின் ஈ நிறைந்துள்ளது. இவை நமது முடி சேதமடைவதைத் தடுத்து, மயிர்க்கால்களை திடப்படுத்தி, முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 

4. நிலக்கடலை: நிலக்கடலையில் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விட்டமின் ஈ மட்டுமின்றி, பயோட்டின், பொட்டாசியம், ஜிங்க் போன்றவையும் உள்ளன. இவை முடியின் வளர்ச்சியை அதிகரித்து முடி உதிர்வைத் தடுக்கிறது.

5. பாதாம்: பாதாமிலும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் துத்தநாகம், மக்னீசியம், விட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவற்றால் உங்கள் தலைமுடி, சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com