படிகாரத்தின் அட்டகாசமான 6 மருத்துவப் பயன்கள்!

6 Amazing Medicinal Uses of Alum
6 Amazing Medicinal Uses of Alum

வீட்டு வைத்தியத்தில் முக்கியப் பங்கு வகிப்பது படிகாரம். இது பல உடல் பிரச்னைகளுக்கு தீர்வைத் தருகிறது. பழங்காலத்திலிருந்தே படிகாரம் பயன்படுத்தப்படுகிறது. ​​​​அந்தக் காலத்திலும் படிகாரம் பல வகையான வலிகளை நீக்கும் தைலமாக வேலை செய்தது. படிகாரத்தின் நன்மைகள் ஏராளம். அதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.

1. மவுத் வாஷ்: படிகாரம் பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது இயற்கையான வாய் பிரெஷ்ஷனராக செயல்படுகிறது. தண்ணீரில் படிகாரம் கலந்து வாய் கொப்பளிக்க, பல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும். படிகாரம் வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.

2. காயங்களுக்கு களிம்பு: படிகாரம் தடவினால் இரத்தப்போக்கு நிற்கும். காயம் பட்ட இடத்தை படிகாரம் கலந்த தண்ணீரில் கழுவினால், இரத்தப்போக்கு நின்றுவிடும். படிகாரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது காயத்தின் மீது தொற்று ஏற்படும் அபாயத்தை நீக்குகிறது.

3. இருமல் நிவாரணம்: படிகாரம் இருமல் பிரச்னையை நீக்குகிறது. படிகாரம் கலந்த நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டை புண் குணமாகும். படிகாரப் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால், சிறிது நேரத்தில் இருமல் நிவாரணம் கிடைக்கும்.

4. சருமத்துக்கு நன்மை பயக்கும்: படிகாரம் பல சரும பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும். படிகாரம் முகத்திற்கு இயற்கையான கிளென்சிங் பொருளாக செயல்படுகிறது. படிகார நீரில் முகத்தை மசாஜ் செய்வதன் மூலம் முகத்தை சுத்தம் செய்யலாம். இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும்.

இதையும் படியுங்கள்:
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இத்தனை நன்மைகளா?
6 Amazing Medicinal Uses of Alum

5. தலையில் உள்ள அழுக்குகளை அகற்ற உதவும்: ஷாம்பு முடியை சுத்தப்படுத்துகிறது. ஆனால், ஷாம்புவால் உச்சந்தலையில் சேரும் அழுக்குகளை அகற்ற முடியாது. இதன் காரணமாக, தலையில் பேன்களும் ஏற்படுகின்றன. படிகார நீரில் கழுவினால் முடியின் வேரில் இருந்து சுத்தமாகும். தூசி மற்றும் அழுக்கு வெளியேறும். இது பேன்களையும் கொல்லும்.

6. சிறுநீர் தொற்று: படிகாரம் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சிறுநீர் தொற்றில் இருந்து விடுபட, அந்தரங்கப் பகுதியை படிகாரம் கலந்த நீரில் கழுவலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com