மூளையை பாதிக்கும் ஆபத்தான 6 விஷயங்கள்!

Dangerous things that affect the brain
Dangerous things that affect the brain
Published on

நாம் அனைவரும் இந்த பரபரப்பான நவீன உலகில் ஒரு மெஷின் போல இயங்கிக்கொண்டிருக்கிறோம். நம்மை இயக்குவது நமது மூளைதான். அந்த மூளைக்கு எந்தப் பிரச்னையும் வராமல் காக்க நமது அன்றாட வாழ்வில் ஒருசில விஷயங்களை கடைபிடித்தாலே போதும். அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. உடல் பருமன்: அதிகப்படியான உணவு எடுத்துகொள்வதால் விரைவில் உடல் பருமன் அடைந்து மறதி மற்றும் முதுமை நோய் ஏற்பட்டு விடுகிறது. கடந்த பத்து வருடத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்தியாவில் இருப்போர் முதுமை நோயால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஏறக்குறைய இரு மடங்காக இது அதிகரித்துள்ளது என்பதை ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். நிறைய சாப்பிட்டாலும் உங்கள் மூளைக்கு அது பற்றாக்குறை என்பது கவனிக்கத்தக்கது.

2. தூக்கமின்மை: போதுமான தூக்கம் ஒரு மனிதனுக்குக் கிடைக்காததால் மறுநாள் மிகவும் மந்தமாகவே செயல்பட வேண்டி இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. காரணம், இதனால் உங்களின் மூளையில் நியூரான்களை சரியாக செயல்படுத்தும் திறன் பாதிப்படைகிறது.

3. மன அழுத்தம்: நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் உடல் முழுவதிலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் மன அழுத்தம் ஒரு நல்ல விஷயம். இது ஆபத்தை எதிர்கொண்டு போராடுவதற்கு அல்லது தப்பி ஓடுவதற்கு நமது உடலை தயார்ப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
நல்லெண்ணெய் இத்தனை உடல் பிரச்னைக்கெல்லாமா பயன்படுகிறது?
Dangerous things that affect the brain

4. காலை உணவைத் தவிர்ப்பது: காலை உணவு மிகவும் முக்கியமாகக் கருதப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. காலை உணவை தவிர்ப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. இது மூளையில் பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது. இதனை சமன் செய்ய மெல்லோட்டம் அல்லது நடைப்பயிற்சி தேவைப்படுகிறது. இதனால் மூளை மற்ற உடல் உறுப்புகளை விட அதிக சக்தியை பயன்படுத்தும். காலையில் ஒரு அரை மணி நேரம் இவற்றை மேற்கொள்வதால் மூளை சுறுசுறுப்படைகிறது.

5. நீரிழப்பு: நமது உடல் எழுபது சதவிகிதம் நீரால் ஆனவை. எனவே, மூளையின் செயல்பாடு உட்பட ஒவ்வொரு உடல் செயல்பாடுகளுக்கும் நீர் இன்றியமையாததாகும். நீரினால் உங்கள் மூளையில் ஏற்படும் விளைவு மிக விரைவாக நிகழ்கிறது. தண்ணீரின்றி 2 மணி நேரம் நீங்கள் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்வதானால் உங்களுக்கு அறிவாற்றல் வீழ்ச்சியை ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவு கட்டாயம் தண்ணீர் அருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. சர்க்கரை அளவு: நமது உடலும் மூளையும் செயல்படுவதற்கு சர்க்கரை குறிப்பிட்ட அளவு தேவைப்படுகிறது. ஆனால், நமது நவீன உணவுப் பழக்க வழக்கத்தில் இதை அதிகப்படியாக எடுத்துகொள்ள நேரிடுகிறது. இதனால் மூளை செல்கள் நாள்பட்ட அழற்சியால் பாதிக்கப்படக்கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com