தேங்காய் பால் பல சமையல் வகைகளிலும், இனிப்புகளிலும் பயன்படுத்தப்படுவதுடன், பலருக்கு பிடித்தமான பானமாகவும் உள்ளது. இதில் பல சத்துக்கள் இருந்தாலும், அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்வது சில ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் அடிக்கடி தேங்காய் பால் குடிக்கும் நபராக இருந்தால், அதனால், ஏற்படக்கூடிய 6 முக்கிய ஆபத்துக்கள் பற்றி இந்தப் பதிவின் வாயிலாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
தேங்காய் பால் குடிப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்:
கொழுப்புச்சத்து அதிகரிப்பு: தேங்காய் பாலில் நிறைவுற்ற கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கொழுப்புச்சத்தை அதிகரித்து இதய நோய், உயர்ரத்த அழுத்தம் போன்ற ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும்.
எடை அதிகரிப்பு: தேங்காய் பாலில் கலோரிகள் அதிகம் உள்ளதால், அதிக அளவில் உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கு. குறிப்பாக, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கும்.
சர்க்கரை நோய் ஆபத்து: தேங்காய் பாலில் உள்ள அதிக சர்க்கரை அளவு காரணமாக, நீண்ட காலமாக உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
சிறுநீரகப் பிரச்சனை: தேங்காய் பாலில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கக்கூடும்.
சருமப் பிரச்சனை: அதிகமாக தேங்காய்ப்பால் குடிப்பதால் சிலருக்கு அலர்ஜி உண்டாகலாம். இதனால், சருமத்தில் அரிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
செரிமானப் பிரச்சனை: அதிகமாக தேங்காய் பால் உட்கொள்வது சிலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உங்களுக்கு தேங்காய் பால் குடிப்பது பிடித்தாலும், அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்வது பல்வேறு ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே தேங்காய்ப்பாலை மிதமான அளவில் உட்கொள்வது நல்லது. ஏற்கனவே ஏதேனும் நோய் உள்ளவர்கள் தேங்காய் பால் உட்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெறுவது அவசியம். எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வது ஆபத்தை விளைவிக்கும் என்பதை நன்கு உணர்ந்து, எதையும் மிதமாகவே உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.