டிஜிட்டல் உபகரணங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும் காரணத்தால் இன்றைய காலகட்டத்தில், பலருக்குக் கண் பார்வை குறைவதுடன், கண்கள் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டு, கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த வகையில் கண் பார்வையை கூர்மைக்கும் பீட்டா கரோட்டின் நிறைந்த ஆறு உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பச்சை இலை காய்கறிகள்: பச்சை இலை காய்கறிகளான கீரை, முட்டைக்கோஸ், போன்றவற்றில் லுடீன் மற்றும் பல சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டு சத்துக்களும் கண்களின் விழித்திரைக்கு பாதுகாப்பு அளித்து, கண் பார்வையை மேம்படுத்துகிறது.
2. பழங்கள் மற்றும் காய்கறிகள்: இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், பாகற்காய், மாம்பழம் மற்றும் ஆப்ரிகாட் போன்ற ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் ஏ வடிவமான பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளதால் இது பார்வைக் குறைபாட்டை மேம்படுத்துகிறது. குறிப்பாக, மாலைக்கண் நோயை தீர்க்க மிகவும் உதவியாக இருக்கிறது.
3. மீன்: சால்மன் மற்றும் டுனா எண்ணெய் மீன்களில் ஆரோக்கிய கொழுப்பான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் கண் உலர்வு பிரச்னையில் இருந்து விடுபடவும், விழித்திரையில் ஏற்படும் பாதிப்பில் இருந்து விரைவாக மீட்கவும் உதவுகின்றன.
4. பெர்ரி பழங்கள்: கண்களுக்கு சூப்பர் ஃபுட் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, கிரீன்பெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி (Berries) ஆகியவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளதால் பார்வை திறனை அதிகரிப்பதோடு, கண் தொடர்பான பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்கவும் இது செயல்படுகிறது.
5. வாழைப்பழம்: வாழைப்பழம் (Banana) வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக இருப்பதால் இது கண் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. வைட்டமின் ஏ, நல்ல பார்வை திறனுக்கு மிகவும் அவசியமான கார்னியாவைப் பாதுகாக்கிறது.
6. சோம்பு: சோம்பு என்னும் பெருஞ்சீரகத்தில் (FennelSeeds) வைட்டமின் ஏ, சி மற்றும் மினரல்கள் இருப்பதால் கண் பார்வையை கூர்மையாக்குகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் இதில் உள்ளன. எனவே, ஆயுர்வேதத்தில் சோம்பு 'நேத்ரஜோதி' என்று அழைக்கப்படுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த 6 உணவுகளை அன்றாட வாழ்வில் சாப்பிட்டு கண் பார்வையை கூர்மையாக்குவோம்.