மருந்து மாத்திரையுடன் சாப்பிடக் கூடாத 6 உணவுகள்!

Foods that should not be eaten with medication
Foods that should not be eaten with medication
Published on

ரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் சத்தான உணவுகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவு விதிகளின்படி ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதற்கு பதிலாக, தீங்கு விளைவிக்கும் சில உணவுப் பொருட்களை மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது சேர்த்து சாப்பிடக் கூடாது. அந்த வகையில் மாத்திரை மருந்துடன் சாப்பிடக் கூடாத 6 உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. பால்: பாலுடன் மருந்து சாப்பிடுவதால் மருந்தின் செயல் திறன் பாதிக்கப்படுவதோடு, ஆரோக்கியமும் கெடும் என்பதால் மாத்திரை மருந்துடன்  பால் சேர்த்து சாப்பிடக் கூடாது.

2. காபி: காபியில் உள்ள காஃபின் மற்றும் டானின்கள் மருந்தின் செயல்திறனை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். மேலும், சில சமயங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் காபியுடன் சேர்த்து மருந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஒருவர் மிகை சிந்தனையாளர் என்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள்!
Foods that should not be eaten with medication

3. திராட்சை சாறு: திராட்சை ஜூஸை எந்த மருந்திலும் சேர்த்து தவறுதலாகக்கூட குடிக்கக் கூடாது. ஆன்டிபயாடிக் மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் உட்பட பலவித நோய்களுக்கான மருந்துகளை ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் திராட்சை போன்ற பழச்சாறுகளுடன் எடுத்துக்கொள்ளும்போது, மருந்தின் செயல்திறன் குறையும் என்று ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. திராட்சை சாறு இரத்த ஓட்டத்தில் செல்லும் மருந்துகளின் அளவைக் குறைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

4. புரோக்கோலி: வைட்டமின் கே அதிகம் உள்ள காய்கறியான புரோக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளுடன் மருந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வைட்டமின் கே இரத்தம் உறைவதற்கு உதவுவதால் அத்தகைய சூழ்நிலையில்,  வைட்டமின் கே உட்கொள்வது மருந்துகளின் செயல்திறனைக் குறைக்கும்.

5. குருதி நெல்லிச் சாறு: குருதி நெல்லிச் சாறு சில மருந்துகளின் செயல் திறனை குறைக்கும் என்பதால்  குருதி நெல்லிச் சாறு குடிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யவும்.

5. குளிர்ந்த நீர்: குளிர்ந்த நீருடன் கூட மருந்து உட்கொள்வதை நிச்சயம் தவிர்க்கவும். மருந்தை எப்போதும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுவது மிகவும் பாதுகாப்பானது. மருந்தை மிக சிறிதளவு தண்ணீர் சேர்த்து சாப்பிட்டால் உடலில் சரியாகக் கரையாது என்பதால் அதிகமாக தண்ணீர் சேர்த்து எடுத்துக்கொண்டால் அவை எளிதில் கரையும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் கடன் பிரச்னை நீங்க இந்த 3 பொருட்கள் குறையாமல் பார்த்துக்கோங்க!
Foods that should not be eaten with medication

6. மது பானம்: ஒயினில் உள்ள ஆல்கஹால் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் வினைபுரிந்து வயிற்று வலி, வாந்தி, வியர்வை, தலைவலி மற்றும் இதயத்துடிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் மருந்துகளுடன் சேர்த்து மது பானத்தை ஒருபோதும் சாப்பிடக் கூடாது.

மேற்கூறிய 6 உணவுகளுடன் சேர்த்து மருந்து மாத்திரைகளை எப்போதும் சாப்பிடக் கூடாது என்பதை கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com