முதுமையில் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்.. மீறி சாப்பிட்டா? 

6 foods to avoid in old age.
6 foods to avoid in old age.

நமக்கு வயதாகும் போது நம் ஊட்டச்சத்துத் தேவைகள் முற்றிலும் மாறுகின்றன. எனவே ஆரோக்கியமான மற்றும் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளைப் பின்பற்றுவது முக்கியமானது. எனவே முதுமையில் சரியான உணவுகளைத் தேர்வு செய்து உட்கொள்வது மூலமாக, உணவினால் ஏற்படும் எதிர்மறைத் தாக்கத்தைத் தடுக்கலாம். எனவே, இப்பதிவில் முதுமை காலத்தில் நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள் என்னவெனப் தெரிந்து கொள்ளலாம். 

1. அதிகப்படியான உப்பு: முதுமை காலத்தில் அதிக உப்பு உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கும். இதனால் பல பிரச்சினைகள் உடலில் ஏற்பட வாய்ப்புள்ளது. வயதானவர்கள் ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உப்பு நிறைந்த தின்பண்டங்கள் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை மற்றும் மசாலாப் பொருட்களைத் தேர்வு செய்து உட்கொள்ளுங்கள். 

2. வறுத்த மற்றும் எண்ணெய் உணவுகள்: வறுத்த மற்றும் எண்ணெய் உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிக அளவில் இருப்பதால், எடை அதிகரிப்பு, இதயப் பிரச்சினைகள் மற்றும் செரிமானப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே சமோசா, பக்கோடா மற்றும் பிற எண்ணெய் உணவுகள் உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள். இவற்றுக்கு பதிலாக பேக்கிங், கிரில்லிங் மற்றும் ஸ்ட்ரீமிங் முறையில் சமைக்கப்படும் உணவுகளைத் தேர்வு செய்வது நல்லது. 

3. அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள்: அதிகப்படியான சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே அதிகப்படியான இனிப்புகள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். 

4. அதிக காரமான உணவுகள்: இந்திய உணவுகள் அதன் காரமான மசாலா பொருட்களுக்கு பிரபலமாக இருந்தாலும், வயதானவர்கள் அதிக காரம் உட்கொள்வதால் செரிமானப் பிரச்சனைகள், நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே மிளகாய்த்தூள், மிளகு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்திடுங்கள். 

இதையும் படியுங்கள்:
எவரையும் ஈர்க்கும் 6 வழிகள்!
6 foods to avoid in old age.

5. அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்: அதிக கொழுப்புள்ள பால், சீஸ், வெண்ணெய் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வதால், உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே குறைந்த கொழுப்புடைய பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அல்லது இவற்றிற்கு மாற்றாக பாதாம் பால் அல்லது சோயா பால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். 

6. அதிகப்படியான டீ மற்றும் காபி: டீ மற்றும் காபியை மிதமான அளவு எடுத்துக் கொள்வதில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அதிக அளவு எடுத்துக் கொண்டால் நீரிழப்பு, தூக்கமின்மை, இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எனவே இவற்றிற்கு மாற்றாக கிரீன் டீ, மூலிகைத் தேநீர் அல்லது காஃபின் நீக்கப்பட்ட காஃபி போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com