வயதான தோற்றத்தை தடுக்க கடைபிடிக்க வேண்டிய 6 பழக்க வழக்கங்கள்!

health awarness...
health awarness...
Published on

மது தவறான சில அன்றாட பழக்கவழக்கங்கள் உங்களை விரைவாக வயதான தோற்றத்திற்கு இட்டுச்செல்லும். அதனை கண்டறிந்து அந்த பழக்கவழக்கங்களை உங்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்து நீக்குவதே இதற்கான தீர்வாக அமையும்.

முன்கூட்டியே வயதாவது (Premature Ageing) என்பது உங்களின் வயது வேகமாக உயர்கிறது என அர்த்தம். வயதுக்கு ஏற்ற வகையில் இல்லாமல் உடல் ரீதியிலும் சரி, மன ரீதியிலும் சரி விரைவாக முதிர்ச்சியடைவதை இது குறிக்கிறது. இது 40 வயதுக்கும் குறைவானோரிடம் அதிகம் காணமுடிகிறது. இது அன்றாட பழக்க வழக்கங்களால் மட்டும் ஏற்படுவதில்லை. மரபணு ரீதியாகவும், சுற்றுப்புற சூழல் காரணமாகவும் கூட இது ஏற்படலாம். இருப்பினும், மோசமான வாழ்க்கை முறை என்பது இதில் முக்கிய காரணமாகும்.

முன்கூட்டிய வயதாகும் தன்மைக்கான அறிகுறிகள் என்று பார்த்தால் தலைமுடி செம்பட்டை நிறத்தில் மாறுவது அல்லது மூட்டு பகுதிகளில் இருக்கம் அல்லது கடுமையான வலி; சருமம் வழக்கத்தை விட வறண்டும், மெலிதாகவும் தோற்றமளிப்பது ஆகியவற்றை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். உடற்சோர்வு, அறிவாற்றலான செயல்பாடுகள் குறைவது, எலும்பின் அடர்த்தி குறைவது, பார்வைக் கோளாறு ஏற்படுவதும் அறிகுறிகளாக கூறப்படுகிறது. 

இதனைத் தவிர்க்க ஒழித்துக் கட்ட வேண்டிய6 பழக்க வழக்கங்கள் 

1. புகைப்பிடித்தல்

புகைதான் உடலில் நச்சுகள் சேர்வதை உண்டாக்கும். இதனால் சருமத்தின் செல்கள் பாதிக்கப்பட்டு அதன் நெகிழ்வு தன்மை குறைந்துவிடும். இதனால் தோல் சுருக்கம் ஏற்படும். எனவே, புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

2. அதிகமாக மது அருந்துதல்: 

மதுபானத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது என்பது சருமத்தில் நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். இது கல்லீரலை பாதிக்கும். இது உடல்நிலையை பாதிக்கும், முன்கூட்டியே வயதாகும் தன்மையை கொண்டுவரும்.

3. தூக்கமின்மை: 

சரியான நேரத்தில் சரியான அளவில் நீங்கள் தூங்கவில்லை என்றால் பிரச்னைதான். இதே தினமும் நடந்தால் கூடுதல் பிரச்னையாகும். தூக்கத்தின் போதுதான் உடல் தன்னைதானே மீட்டெடுத்துக்கொண்டு புதிய சரும செல்களை மறுஉற்பத்தி செய்யும். போதிய தூக்கம் இல்லாதது இதில் தடையை ஏற்படுத்தும். தொடர்ந்து சரியாக தூங்கவில்லை என்றால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனம் அடையும். எனவே இரவு விரைவாக தூங்கி, காலையில் விரைவாக எழுந்திருங்கள்.

4. உடற்பயிற்சிகளை ஒதுக்குவது: 

போதிய அளவு உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு இல்லாதது பெரிய பிரச்னையாகும். உடற்பயிற்சிதான் உங்களின் இதய ஆரோக்கியத்தை வலிமையாக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கும். உடல் உழைப்பே இல்லாவிட்டால் அது இதயத்திற்கு ஆபத்து.

இதையும் படியுங்கள்:
சுவையான தேங்காய்ப் பால் குஸ்கா-இளநீர் இட்லி செய்யலாம் வாங்க!
health awarness...

5. அதிக மன அழுத்தம்: 

தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு வயது விரைவாக முதிர்ச்சி ஏற்படும். உடலில் Cortisol எனப்படும் ஹார்மோன் அதிகம் சுரக்கும். இது சருமத்தில் பிரச்னையை உண்டாக்கும்.

 6.ஆரோக்கியமற்ற உணவுமுறை: 

எப்போதும் உணவில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புச்சத்து உள்ள உணவுகள் முன்கூட்டியே வயதாகும் தோற்றத்தை ஏற்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com