புகைப்பழக்கம் உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியதாகும். இது புகைப்பிடிப்பவரை பாதிப்பது மட்டுமில்லாமல், அவரை சுற்றியுள்ள அனைவருடைய ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாகும். எனவே, புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே ஒழிப்பது சிறந்தது. எனினும், இந்த பழக்கத்தை உடனே விட்டுவிட முடியாது. அதை தவிர்க்க இயற்கையாகவே செய்யக்கூடிய 6 வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. உந்துதல் வேண்டும்: நீங்கள் ஏன் புகைப்பிடிப்பதை விடுவதாக முடிவெடுத்தீர்கள். எந்த உந்துதலால் இந்த முடிவை எடுத்தீர்கள் என்பதை எழுதி வைய்யுங்கள். அடுத்த முறை புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது எதற்காக இந்த முடிவை எடுத்தீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2. பச்சை காய்கறிகள்: புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போது, பச்சை காய்கறிகளை மென்று தின்பது அந்த உணர்வை கட்டுப்படுத்த உதவும். Carrots, nuts போன்றவற்றை சாப்பிடலாம். இன்னும் சிலர் சாக்லேட், பபிள் கம் போன்றவற்றை பயன்படுத்துவார்கள்.
3. புகைப்பிடிக்க தூண்டுவதைத் தவிர்க்கவும்: எந்த விஷயம் சிகரட் பிடிக்க வேண்டும் என்ற உணர்வை தருகிறதோ அதை அறவே தவிர்த்து விடுவது நல்லது. உதாரணத்திற்கு, ஒயின் குடிக்கும்பொழுது சிகரட் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், ஒயின் அருந்துவதை தவிர்த்து விடுவது நல்லது.
4. வேறு ரிலேக்ஷேசனை தேடவும்: பலருக்கு சிகரட் பிடிப்பது ஒரு பொழுதுபோக்கான விஷயம். ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது சிகரட் பிடிப்பார்கள். எனவே, ரிலாக்ஸாக இருக்க வேறு வழிகளை தேர்வு செய்வது சிறந்ததாகும். உதாரணத்திற்கு மசாஜ் செய்துக்கொள்வது, நன்றாக குளியல் போடுவது போன்றவற்றை முயற்சித்துப் பார்க்கலாம்.
5. உடற்பயிற்சியில் கவனம்: காலையில் எழுந்து இயற்கையோடு இணைந்து உடற்பயிற்சி செய்வது, தூய்மையான காற்றை சுவாசிப்பது புகைப்பழக்கத்தை கைவிடுவதற்கு சிறந்த ஆரம்பமாகும். நீச்சல்பயிற்சி, நடைப்பயிற்சி, ஜிம், சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சி செய்வது கவனத்தை உடல் ஆரோக்கியத்தின் மீது திருப்புவதற்கு உதவும்.
6. வைட்டமின் சி: உணவிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் வைட்டமின் சியின் அளவு புகைப்பிடிப்பதால் குறைந்துவிடும். அதனால், அதிகமாக வைட்டமின் சி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆரஞ்சு, கிவி, பச்சை காய்கறிகள், புரோக்கோலி, முட்டைகோஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவதால் சருமம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய உதவும். இந்த 6 எளிய இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடுங்கள்.